ஒரு மீற்றர் தூரத்தில்
ஓராயிரம் கனவுகளுடன்
ஒற்றை விரலால் உலகை அசைக்கும்
தொற்று நோய்க்கு அஞ்சி
தொடாமல் முகத்தை
அணிந்தோம் கவசத்தைமுகக்கவசத்திற்க்கு பின்னால்
முறுவலிக்கும் நட்பு
முடிவடையவில்லை..
கண்ணும் கண்ணும்
கொள்ளையடிக்கும்
காதலும்
கறுகவில்லை...சிரிக்கும் முகங்கள்
சிறை பிடித்தாலும்
சிறகடிக்கும் உறவுகள்
சிங்காரிக்க மறக்கவில்லை
முகக்கவசத்திற்க்கு பின்னால்...வெறும் பாதுகாப்பு கவசமே,
வெறும் துணி மட்டுமே...
முகக்கவசத்திற்க்கு பின்னாலும்
முடியவில்லை
முன்னேறும் பாதை...