கதிர் முதல் முறை குடித்துவிட்டு வந்த போது,
கதிர் தள்ளாடி தள்ளாடி அறைக்கு உள்ளே வர,
முல்லை : கோபத்துடன், குடிச்சிருக்கியலா?
கதிர் : நானா....? குடிச்சிருக்கேனாவா...? எவன் சொன்னான்?
முல்லை : ஆமா, யாராவது சொல்லனுமாக்கும்?
கதிர் : ஏய்.... என்ன...? இவ்வளவுநாள் பொட்டலம் போடுறவன், அழுக்கு சட்டை ன்னு அசிங்கப்படுத்தனது போதாதுன்னு இப்ப குடிகாரன் ன்னு வேற சொல்லறயா?
முல்லை : யாரு, நா சொன்னேனா அப்படி? நீங்களா நெனச்சிகிட்டா.....
ஏங்க! ஏன் இப்படி தள்ளாடுறீங்க? போய் உட்காருங்க....!கதிர் : நீ வேற தனியா சொல்லனுமா? அதான் உன் ப்ரண்ட் சொன்னாளே! இவனையா கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு. நான் உன்ன கட்டிக்க சொன்னேனா?
முல்லை : ஓஹோ....! ஐயாவுக்கு அந்த எண்ணமெல்லாம் இருக்கோ?
கதிர் நக்கலாக,
கதிர் : ஆமா. இவ பெரிய அழகி? இவள கட்டிக்க நிக்கறாங்க.
முல்லைக்கு கோவத்தில் முகம் சிவக்க,
முல்லை : ஒருநாள் இல்ல ஒருநாள் உங்க வாயால "நான் அழகி" ன்னு சொல்ல வைக்கல என் பெயர் முல்லை இல்ல.
கதிர் : ஆமா.தொல்லை ன்னு வச்சுக்க. வசதியா இருக்கும்.
(கொஞ்சம் இடைவெளி விட்டு)
உனக்கு தான் என்னை பிடிக்காதுல, அப்புறம் ஏன் இங்க இருக்க?என்ன பிடிக்காதவங்க யாரும் இங்க இருக்க வேணாம்.உன்ன யாரு இங்க இருக்க சொன்னா? நீ போக வேண்டியதுதானே.அத விட்டுட்டு இப்படி தெரு தெருவா கூட்டிபோய் என்னை அசிங்கப்படுத்தறயா?
முல்லை : ஆமாங்க. நான்தான் உங்கள தெருதெருவா கூட்டிபோய் அசிங்கப்படுத்தறேன். பேசாம போய் படுங்க சொல்லிட்டேன்.
கதிர் : ஏய் என்ன மிரட்டுறயா? இந்த கதிர் யாருக்கும் பயப்பட மாட்டான். நீ போ. போய் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இரு. எனக்கு யாரும் வேணாம்.