தலையை அழுத்தி கண்களை இருக்க மூடி நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்திருந்த உதய் என்ன நினைக்கின்றான் என்று தெரியாமல் அடுத்த என்ன வேலை செய்ய என்று தெரியாமல் அவனுக்கு சற்று தள்ளி நின்று கடந்த அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி...
நேரம் செல்ல செல்ல தன்னை அறியாமல் தூக்கம் வர அதை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தாள்...
'காலைல வந்த ஒடனே தூங்குறவன் கொஞ்சம் வீட்டுல தூங்கி எந்திரிச்சிட்டு தான் வர்றது... இவனை பாத்து நமக்கும் தூக்கம் வருதே'
இதற்குமேல் பொறுத்தால் தான் அந்த இடத்திலேயே தூங்கி சரிந்து விடுவோம் என்று உணர்ந்து உள் சென்றிருந்த குரலை கடினப்பட்டு வெளியில் இழுத்து, "சார்" என்றாள்...
அவனிமிருந்து பதில் எதுவும் இல்லை... 'நெஜமாவே தூங்கிட்டாரா?' வியந்தவள் அவனது இருக்கைக்கு அருகே செல்ல கால்கள் நடுங்கினாலும் மனதில் இருந்த தயக்கத்தையும் ஓரம் தள்ளி அவனுக்கு அருகில் சென்றவள் அவனது அகன்ற தோள்களை தொட சென்ற கைகளை பாதியிலேயே நிறுத்தியது அவனது சிறிய அசைவு...
திடுக்கிட்டு இரண்டடி பின்னே சென்று நெஞ்சில் கைவைத்து வேகமாக சென்ற இதயத்துடிப்பை அடக்கி வைத்தாள்... இதயத்தை நிலைக்கு கொண்டு வந்த பிறகு அவனது அமைதியான மற்றும் ஆழ்ந்த யோசனையில் இருந்த முகத்தை உன்னிப்பாக கவனித்தவளுக்கு என்றும் இல்லாமல் இன்று அவன் சற்று வித்யாசமாக தெரிந்தான்...
அந்த வித்யாசம் என்ன என்றால் அவனை ஒவ்வொரு அணுவாக கவனித்தாள் அந்த குளிர்ந்த எசியையும் தாண்டி அவன் விருப்பப்படி ஓடும் அந்த மின்விசிறியின் காற்று அவன் அடர்த்தியான தலைமுடியை வருடி சென்ற பொழுது அதற்கு இணைய அசைந்தாடும் அவன் ஒற்றை முடி அவன் அமைதிக்கு இடையூறாக தோன்றியது.
அதில் சுருங்கும் அவன் நெற்றியும் புருவங்களும் ஒரு வித சிலிர்ப்பை அவள் உடலில் தந்தது... அந்த செதுக்கி வைத்தாற்போல் இருந்த அந்த கூர்மையான மூக்கும் அவன் முகத்தில் இருக்கும் கம்பீரமும் அவன் கண்களில் எப்பொழுதும் தெரியும் அந்த அதிகாரமும், உயிரின் ஆழம் வரை சென்று ஊடுருவும் பார்வையும் இல்லாதது அவளுக்கு ஒரு நிம்மதி அளித்தது இந்த சிறு இடைவேளை அவனை ரசிக்க போதுமானதாக இருந்தது...

YOU ARE READING
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...