கேரக்டர்-ல டவுட் இருக்கவங்களுக்கு இந்த கிளாரிஃபிகேஷன் (highlighted persons are very important persons of the story) :
ஆதி கேசவன் - ஹீரோ
உதய் மாதவன் - ஹீரோ
யாழினி - ஹீரோயின்
மணிமேகலை - ஹீரோயின்
ஆதவன், தமிழ், கெளதம் - உதய் மற்றும் ஆதியின் நண்பர்கள்
காயத்திரி - உதய்யின் அம்மா
திவ்யா, பல்லவி, ஹரி, விஷ்ணு - உதய்யின் சகோதர சகோதரிகள்
சஹானா - ஆதி சகோதரி
ஈஸ்வரன் - உதய்யின் மாமா
ஜெயன், சக்தி - உதய்யின் அசிஸ்டன்ட்ஸ்
நீரஜ் தழல் - உதய்யின் தொழில்முறை போட்டியாளன்...
Note: Lakshminovels she is new to wattpad but she is author for many novels... kindly support her
****************
பத்து தளங்கள் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் அது... இரவின் குளிர்ச்சியும் கடலின் வெம்மையும் ஒரு சேர காற்றில் கலந்து சுகமாய் வீசியது அந்த மேல் தலத்தில்...
அதற்கு போட்டியாய் மனம் கமழும் உணவின் வாசனை பசியே இல்லாதவர்களுக்கும் பசியை தூண்டி விட்டது... மேல்த்தட்டு வாடிக்கையாளர்களுக்கு சுட சுட பரிமாறப்பட்ட உணவும் அதை எடுத்து சென்ற பேரர்களின் கண்கள் அந்த உணவை ரசனையாய் பார்த்தாலும் அந்த ரசனையை தாண்டி இருந்த ஏக்கமும் ஒரு சிலரின் கண்களுகே தெரியும்...
இரவின் கருமைக்கு இணையாக அந்த கருப்பு நிற பெர்ராரி வந்து நின்ற வேகத்தில் அந்த இடமே அதிரிந்தது... காரில் இருந்தது இறங்கியவன் அங்கு அவன் பெற்ற கவனத்தை எல்லாம் உதாசீன படுத்தி மின்னலாய் அந்த பைவ் ஸ்டார் ரெஸ்டாரென்ட்டினுள் நுழைந்தான் ... ரிஸப்ஷனில் இருந்த பெண்ணிடம் கண்களில் இருந்த அந்த குலர்ஸை கழட்டாமல் தனக்கு தேவையானதை கூறி மேல் தளத்திற்கு விரைந்தான் சற்றும் குறையாத கோபத்துடன்...

ESTÁS LEYENDO
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...