அத்யாயம் - 13

1.2K 55 37
                                    


வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான் அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்...

ஆதவனை பார்த்த ஜெயன், "மார்னிங் சார்" அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது...

"உதய்?" 

"ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு" 

தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்... ஐ.சி.யூ என்றச் சிகப்பு நிற எழுத்துக்களுடன் ஒரு சிகப்பு நிற சிறிய பல்பு எரிந்துக் கொண்டிருந்த அறைக்கு சற்று தள்ளி போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தான் உதய்... 

அவனிடமிருந்துப் பார்வையை விளக்கி அங்கே நின்றுக் கொண்டிருந்த தமிழ் மற்றும் கௌதமை பார்த்து முறைத்தவன் அவர்களிடம் சென்று, "ஐ.சி.யூ ல இருக்க அளவு என்னடா பிரச்னை?"

"ஒன்னுமே புரியலடா எங்களுக்கு...ஒரு சின்ன வெட்டுதாண்டா..." கெளதம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அமைதியாக அமர்ந்திருந்த உதய் கோவத்தில் அமர்ந்திருந்த நாற்காலியை வீசி எறிந்தான், அந்தத் தளமே அதிரும் வகையில்... 

நேராக வந்தவன் கௌதமின் கழுத்தை பற்றி அருகில் இருந்த சுவற்றில் தள்ளினான் கண்களில் கோவத்தை மட்டுமே டன் டன்னாய் சேமித்து... 

"சின்ன வெட்டா? சின்ன வெட்டுக்காடா இப்புடி ஐ.சி.யூ ல உயிருக்குப் போராடிட்டு இருக்கான்... அங்க தான இருந்திங்க ரெண்டு தடி மாடுகளும் இல்ல வேற புடுங்குற வேலைய எதுவும் பாத்துட்டு இருந்திங்களா? 

அவன் மேல கை வச்ச அடுத்த செகண்ட் அவனை துண்டு துண்டா வெட்டி கடல்ல வீசிட்டு வர்றத விட்டுட்டு இங்க நின்னு ஒன்னும் புரியலன்னு கதை அளந்துட்டு இருக்க... இதுக்காக தான் அவனை உங்க கூட விட்டுட்டு போனேன்னா? அவனுக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆகட்டும் அடுத்த நிமிஷம் ஒடம்புல உயிர் இருக்காது உனக்கு"

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now