💖 Episode - 01 💖

4.1K 83 23
                                    


அதிகாலை 5மணிக்கு alarm படவே, இப்பத்தான் தூங்கினது போல இருக்கே என்று முணங்கிக் கொண்டு எழுந்தாள் உஷா. நேற்றைய நிகழ்வை நினைவுக்கூர்ந்தவள், இந்த பிரச்சினைக்கு அவசரமாக எப்படியாவது முடிவு காணவேண்டும் அதுவரை என்று எண்ணியபடி, Phone ஐ do not disturb mode க்கு போட்டுவிட்டு Sofa வில் கும்பகர்ணன் போல தூங்கும் ஆதவனை கண்டு பொறாமைப்பட்டபடியே washroom இல் புகுந்தாள் உஷா.

காலைக்கடன்களையும், குளியலையும் முடித்துவிட்டுவர, ஆதவனது phone உம் alarm அடித்தது. தலையை துடைத்தவாறு சமையலறையில் புகுந்து தனக்கும், ஆதவனுக்கும் தேநீர் தயாரித்தாள். கொண்டுவந்து ஆதவனின் கையில் கொடுக்க, அவனோ கண்களை கசக்கிக் கொண்டு ஃபோனை பார்த்து கொண்டு இருந்தான்.
"உஷா, சாப்பாடு வேணா. நா friends கூட lunch போறேன்" என்றான்.
"ஹா, சரி" என்று வீட்டை துப்பரவாக்க தொடங்கினாள்.

30 நிமிடங்களில், தயாராகி வந்தான் ஆதவன் அவளை கண்டு,
" office போகல்லயா உஷா?? " என்று கேட்க,
" இல்ல" பதிலளித்தாள். ஏன் என்று கூட ஒரு வார்த்தை ஆதவன் கேட்கவில்லையே. கேட்டாலும் சொல்லவா போகிறேன் என்றது மனமும். அவன் காரில் ஏறி போகும்வழியை கதவை மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தவள் போனபின், கதவை தாளிட்டு சமயலறையை நோக்கி சென்றாள். ஓட்ஸ் கஞ்சை தயார் செய்து bowl இல் போட்டுக் கொண்டு அறைக்குள் நுழைந்து, lap இல் தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். தனிமை சற்று பயப்பட செய்ய, vc player ஐ on செய்து பாட்டு கேட்டபடியே செய்துக் கொண்டு இருந்தாள்.

11மணியளவில், calling bell அடிக்கும் சத்தம் கேட்டது. ஒரு முறை பேசாமல் இருந்தாலும் அடுத்தடுத்து அடிக்கப்பட்டது.
யாராக இருக்கும் என்று மனம் நினைக்க, நெஞ்சும் வலித்தது. பயந்தபடியே கதவின் அருகே சென்றாள்.
கதவின் சிறிய துளையால் பார்க்க, தான் நினைத்தவர்கள் அல்ல, மாறாக தன் தாயும் அக்காவும்.

சந்தோசமாக கதவை திறந்தாள் உஷா.
"உஷா, உள்ள வரலாமா??" என்று  கேட்க,
"அம்மா, அக்கா, இதென்ன கேள்வி? உள்ள தாராளமா வாங்க"
" எவ்வளவு நேரம்  bell பண்ணோம். கேட்கல்லயா??? என்ன செஞ்சிட்டு இருந்த உஷா? நல்லா பயந்தோம்"
" சும்ம தான், இன்னைக்கு கொஞ்சம் தலைவலின்னு லீவ் போட்டு சாய்ந்து கொண்டு இருந்தேன் மா. கேக்கல மா. ஏன் பயந்த? நா தான் உங்க brave girl ஆகிட்டே" என்றாள் உஷா. ஆனாலும் brave இற்கும் அவளுக்கும் இப்போது ரொம்ப தூரம் என்று அவளை தவிர யாரும் அறிந்ததில்லையே.
"அதுசரி அம்மா , நா இன்னைக்கு லீவ்னு உங்களுக்கு எப்படி தெரியும்??"
" ஆதவன்க்கு call பண்ணி கேட்டேன். அவன் தான்மா சொன்னான். ஏன் போகல்லன்னு கேட்க, தெரியல அவசரத்துல office வந்துட்டேன்னு சொன்னான்" முகமாறியவாறு அக்கா சொன்னார்.
உஷாவிற்கு தலைவலி என்று சொல்வது உண்மை என்று headfast balm இன் வீரியம் இருவரினது மூக்கையும் துளைத்து உணர்த்திக் கொண்டு இருந்தது.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Tahanan ng mga kuwento. Tumuklas ngayon