💖 Episode - 03 💖

3.5K 58 23
                                    


தானும் ஒழுங்காக காலையுணவு சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ள, ஹாலிற்கு வந்தான் ஆதவன். மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்த உஷாவை பார்த்து,
" I am sorry உஷா. நா ஏசியது பேசியதெல்லாம் எங்க நன்மைக்காக தான் செய்தேன்" என்று மனதால் சொன்னான். நான் இருப்பது தெரிந்து தானே ஒரு பார்வை கூட பார்க்காம இருக்க?  என்றபடி fridge யை திறந்து பார்ப்பதும், சமையலறையில் gas cooker இல் ஏதாவது இருக்குமா என்று சட்டி முட்டிகளை திறந்து பார்த்தான். எங்காளோ தேடி வந்து Maggie இன் instructions யை பார்த்துக் கொண்டு இருக்க, பல தடவைகள் அவன் என்ன செய்கிறான் என்று எட்டிப்பார்த்தாள் உஷா தன்னை அறியாமலே.
பின் அவளுக்கே பாவமாக இருக்க,
" என்ன செய்தாலும் பாவம் ஆதவன். இருக்கும் நாட்களில் ஒழுங்காக கவனித்து விட்டு போகலாமே" என்று lap யை மூடிவிட்டு சமையலறைக்கு வந்தாள்.

Dining table இல் இரண்டு பீங்கான்களை வைத்துவிட்டு, தண்ணீர் நிரப்பி இரண்டு கிளாஸ்களையும் வைத்தாள். Fridge இல் இருந்த தன் தாய் கொண்டுவந்த உணவுப் பார்சலை எடுத்து, தனித்தனியே கறிகளையும், சோற்றையும் சுடவைத்தவள், ஆதவனின் கையில் இருந்த Maggie பக்கட்டை பறித்து வைத்துவிட்டு,
"சாப்பிட வாங்க" என்று அவளும் dining table இற்கு வந்தாள்.

அது சிறிய மேசை என்பதால் இருவரும் நேராக அமர்ந்தே சாப்பிட்டனர். மறந்தும்கூட உஷா ஆதவனின் முகத்தை பார்க்கவில்லை. முகத்தை தொங்கவைத்து கொண்டு இருந்தாள். அவளின் கோபம், கவலை எல்லாம் அவளது முகத்தில் பலதடவைகள் ஆதவன் ஆராய்ந்தான்.

அவசரமாக சாப்பாட்டை உண்டுவிட்டு, கை கழுவிக் கொண்டு விறுவிறுவென அறைக்குள் சென்றாள். "எங்க போகிறாள்?" என்று பார்க்க, 5நிமிடங்களில் மருந்து bag யை கொண்டு வந்து அவனின் முன்னால் கொண்டு வந்து குடிக்கவும் செய்தாள். தன் கோபத்தின் விளைவை கண்கூடாக ஆதவனே கண்டு மெல்லிய புன்னகை பூண்டான் அவள் காணாதபோது.

பின் இருவரும் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். நேரமும் சக்கரமாக சுழன்றது. இரவு 8மணி இருக்கும்.
Dinner இன்று சமைக்க தேவையில்லை என்று ஹாலிற்கு சென்று, resturant க்கு call செய்து order செய்தான் ஆதவன் அவளுக்கு கேட்கும்படி.
சாப்பாடு வந்ததும், அவனே dinning table யை arrange செய்தான்.
"உஷா, சாப்பிடலாம் வா" என்றான் ஆதவன்.
அவளும் சொன்னவுடன் தன் வேலையை விட்டு எழுந்து சாப்பிடவும் வந்தாள்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Tempat cerita menjadi hidup. Temukan sekarang