💖 Episode - 07 💖

1.3K 47 12
                                    


ஆதவனுக்கு சொன்னபடியே, உஷாவும் தன் இறந்த காலத்திற்கு சென்றாள்.

********************************

உஷாவிற்கு காலேஜ் கிடைத்து அவள் தன் மேற்படிப்பை மேற்கொண்டு இருந்தாள். அக்காவிற்கு திருமணமும்  நடந்து, தனிக்குடித்தனம் சென்றனர். இதனால் உஷா, அப்பா, அம்மா. பொதுவாக இருவரும் வேலைக்கு சென்றால் தனிமையிலே கழிந்தன உஷாவின் நாட்கள். காலேஜ் லீவ் கொடுத்தால் அண்ணனின் வீட்டிற்கோ, மகாவின் வீட்டிலோ கழிப்பாள்.

உஷாவும் நல்லவிதமாக படித்து, இறுதியாண்டு இறுதி  semester இற்கும் வந்தாள். அந்த காலகட்டம் தான் தன் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளது வீட்டுக்கு செல்வதற்கு பேருந்தையை பயன்படுத்துவாள். கொஞ்ச தூரம்தான். காலேஜ் முடிந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஃப்ரெண்ட் ரேகாவுடன் சென்று கொண்டு இருந்தாள். அன்று வழமைப்போலவே மாலையில் ஸ்டாண்டில் சன நெரிசல். காலேஜ் பெண்களை பார்த்து இரசிக்கவும், நக்கலடிக்கவென்று ஒரு கூட்டம் இருந்தது. அவர்களை பார்க்கவே ஒரு மாதிரி எரிச்சலாக இருக்கும். சல்வார் கலரை கூறியபடி அல்லது ஏதாவது அங்க அடையாளத்தை கூறியபடி, அல்லது பாட்டு பாடியவண்ணம் இருக்க தினமும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பேருந்திலும் உரசிக் கொண்டு வருவதில் அவர்களுக்கு ஓர் இன்பம் போல. பெண்களா பிறந்தா இதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ என்று உஷா சிலவேளைகளில் அளுத்துக் கொள்வாள்.

அன்று நல்ல மழை. குடைபிடித்தாலும் நனைக்கும் அளவு மழை உரத்து பெய்ந்து கொண்டிருந்தது. இடியும் காதை பிளக்கும் வண்ணம் இடித்துக் கொண்டிருந்தது. மின்னலும் கண்களை பறிக்கும்வண்ணம் மின்னிக் கொண்டிருந்தது. அன்று உஷாவின் துரதிர்ஷ்டவசமாக அவளது நண்பியும் வரவில்லை. ஸ்டான்டில் நிற்க, அந்த கும்பலும் வந்தது. வந்து, அவளை பார்த்து, நக்கலடித்து சிரித்து கொண்டிருந்து, சில கணத்தில் பக்கத்தில் வந்து வேண்டுமென்றே அவளின் தோளோடு தோளாக உரசியபடியே இருந்தான்.
"டேய் விடுடா. அந்தப் பொண்ணு சும்மாவே பயந்து இருக்கா. நீ வேற இன்னும் பயப்படுத்தாதே. அவளை விட்டு தள்ளி இரு" என்று அந்த கும்பலில் நல்லவனாக பேசிக் கொண்டிருந்தான் ஒருவன். உரசிக்கொண்டிருந்தவனை தள்ளிவிட்டு அவளருகே வந்து,
"sorry" என்று அவளை காப்பாற்றுவது போல அவளது விட்டு ஒரு அடி விட்டு இருந்தான் அவன்.
பேருந்தில் ஏறியும் அவள் அமர்ந்திருந்த seat கம்பியை பிடித்தபடி யாரும் அவளை தீண்டாது பாதுகாத்து கொண்டும் இருந்தான்.
"என்னடா அவ மேலும் ஏதும் crush ஆ??" என்றான் ஒருவன்.
" டேய், சும்மா இருடா " என்று புன்னகைக்கும் அவனின் உருவத்தை மூடிய யன்னலில் எதிர்ச்சையாக பார்த்தாள் உஷா. ஆனா முகத்த ஒழுங்கா பார்க்க முடியல.
அப்படியே ஒவ்வொரு நாளும் அந்த கும்பலின் ஒருவனின் உதவி கிடைத்து கொண்டு இருந்தது. என்னதான் இருந்தாலும் அவனும் அந்த குழுவின் ஒருவன் என்ற நினைப்பே தலையில் இருந்தது. தினமும் அவளை பார்க்கவேன்று பஸ் தரிப்பிடத்துக்கு வருவான்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Where stories live. Discover now