அன்றிலிருந்து வீட்டில் இருந்த காரிற்கு ரைவரை போட்டு தான் தங்கையை இனி காலேஜ் அனுப்ப வேண்டும் என்று பெற்றோரை கேட்க, அவர்களும் சம்மதித்தனர். காயத்திருந்த தையலை வெட்ட நாளைக்கு போகனுமே, காலேஜ் வேற லீவ்வே என்ன சொல்லலாம்? அக்கா வேற இல்லயே, இல்லன்னா அக்கா கூட போய் இருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருக்க,
ஒரு notifications.
அரவிந்த் இடமிருந்து,
"உஷா, நாளைக்கு தையல் வெட்டனும். நினைவு இருக்கா??" என்று கேட்க,
" hmmmm" என்று reply செய்தாள் அவள் அவனின் அக்கறையில் சற்றே மகிழ்ந்தபடியே.
"are you free now??" என்று அவன் கேட்க,
"என்னடா இப்படி ஒரு கேள்வி???" என்று நினைத்தவள்,
"இல்ல கொஞ்சம் படித்துட்டு இருக்கேன். ஏன்?? "
"இல்ல சும்ம தான். நாளைக்கு யார்கூட வாரீங்க?? நாளைக்கு 4மணிக்கே dispensary யை close பண்ணிருவாங்க. So கொஞ்சம் early ஆக வாங்க"
" friend கூட. சரி " என்றாள்.
" யாரு அந்த சுருண்ட முடி friend ஆ??? " என்று சொல்ல உஷாவிற்கு என்னவோ போல இருந்தது.
" அப்போ என்ன மட்டும் பார்க்குறதா நினைத்தேன். ஆனா இவன் என்னன்டா ரேகாவையும் பார்த்து இருக்கானே. " என்று அளுத்துக் கொண்டு, message யை பார்த்துவிட்டு reply பண்ணாமல் silent இல் போட்டுவிட்டு தூங்கிவிட்டாள்.காலையும் அழகாக விடிய, யன்னல் அருகே வந்து கீச்சிடும் குருவிகளின் சத்தத்திற்கே முளிப்பு வந்து, இப்ப எத்தனை மணி இருக்கும்?? என்று சோம்பல் விட்டபடியே, மேசையில் இருந்த கையடக்க தொலைபேசியை எட்டி எடுத்து, கண்களை கசக்கியபடி பார்த்தாள்.
அது 8மணியை காட்ட,
100 whatsapp notifications. யாரென்று திறந்து பார்க்க, அரவிந்த்.
I am really sorry
Sorry
Sorry
Sorry
உங்கள சும்ம குழப்பிப்பார்க்குறதுக்கு தான் friend யை use பண்ணேன்.
Sorry da
.......
.....
...
..
என்றிருக்க,
இரவு முழுவதும் அவன் தூங்கி இல்லை என்று அவனது status களும், message அனுப்பிய நேரங்களும் உணர்த்தவே, அவளுக்கே பாவமாக இருந்தது.
" it's okay" என்று மட்டும் அனுப்பி வைத்தாள் அவள்.
அனுப்பியதும் தாமதம்,
"என்னோட கோபமா??" என்று அரவிந்த்.
"இல்ல அரவிந்த். அப்படி ஒன்னுமில்ல"
"அப்போ ஏன் நேத்து message பண்ணி half ல போய்டிங்க??"
" தூக்கம் போனது"
"நேத்து நைட் தூக்கமும் போகல்லடா. உன்ன சும்மா குழப்ப தான் சொன்னேன். நா அவள பார்த்தது இல்ல. மத்தவங்க அவள அப்படி தான் சொல்லி கலாய்ப்பாங்க. அத வைத்து தான் சொன்னேன். என்ன தப்பா நினைக்காதே " என்றான் அவனும்.
அவனின் மீது இருந்த கோபமும் தணிந்து, அவனின் நண்பர்களிடத்தில் பாய்ந்தது. கொஞ்ச நேரம் message பண்ணிவிட்டு தன் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தாள் உஷாவும்.

BINABASA MO ANG
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...