Bench இல் இருந்து இறங்கி, அவள் முன்னே முழங்காலில் நின்றுகொண்டான் அரவிந்த். உஷாவின் கரங்கள் இரண்டையும் தன் கைக்குள் சிறைபிடித்துக் கொள்ள, என்ன செய்யப்போகிறான் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த அந்த கண்களை பார்த்தபடி,
"உஷா, I love you" என்றான் அரவிந்த்.
" என்ன அரவிந்த் இதெல்லாம்??" என்று உஷா கேட்க,
" உஷா, அன்னைக்கு உன்ன முதல்ல கண்டதும் என் மனத பறிகொண்டு போன, எத்தனையோ நாட்கள் தூங்க கூட முடியல்ல. அன்றிலிருந்து உன்ன follow பண்ணேன். எப்பவும் உன்ன பார்க்கவென்றே பஸ் ஸ்டாண்ட்டுக்கு வருவேன். மத்தவங்க உன்ன கலாய்த்தா சண்டைக்கு போவேன். உன் மேனில யாரையும் உரச கூட விட்ரல்ல. உன்ன அவ்வளவு பாதுகாத்தேன். ஆனா நீ தான் என்ன ஒரு பார்வை கூட பார்க்கல. ஆனா ஒரு நாள் பார்ப்பன்னு தெரியும். அந்த நாளும் வந்தது. அதான் அன்டைக்கு உன் chain அ பறித்துட்டு 2பேர் போனதும், அவங்கள பிடித்து chain யை உன்கிட்டகொடுத்தேன். அந்த முதல் பார்வை என் கண்ல இன்னும் இருக்கு. அன்றிலிருந்து தான் என்னை கொஞ்சமாவது பார்க்க தொடங்கினாய். நான் message பண்ணாலும் என்ன நிராகரிக்கிற மாதிரி தான் behave பண்வ, இப்ப ஓரிரு நாட்கள் தான் ஒழுங்கா message பண்ற. Call எடுக்கவா?? என்று கேட்டாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வேண்டாம் என்று சொல்வ. ஆனா நேத்து என்னவோ மேடம் நல்ல mood ல, என்னோட பேசின. என்ட காதல்ல ஏத்துக்கோ உஷா" என்று கூறியபடி, அரவிந்த் pocket இல் கையை நுழைத்து மோதிரம் ஒன்றை எடுத்து அவளது வலது கரத்தில் மூன்றாம் விரலில் இட்டான். கண்கள் விரிய பார்த்தாள் உஷா. பின் மோதிரத்தை போட்டுவிட்டு தன் இதழின் அருகில் அவளது கரத்தை கொண்டு வந்து, மோதிரத்தின் மேல் ஓர் முத்தம் கொடுத்தான் அரவிந்த். உஷா தன் கரத்தை எடுத்து பார்க்க, சிறிய heart வடிவம், அது முழுவதும் வெள்ளை நிற diamonds களும், தங்கநிறமும் சூரிய வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டு இருந்தது.முழங்காலிலே நின்றபடி அவளை நெருங்க, மெல்லிய காற்றில் அவளது கூந்தலும் அசைந்து அவளது முகத்தில் விழுந்தன. அவற்றை எடுத்து காதில் சொறுகிவிட, அவளது உடம்பில் மின்சாரம் பாய, வெண்ணிற கன்னங்கள் சிவப்பாய் மாறின. அவனை நேராக பார்க்க முடியாமல் கீழே பார்வையும் போனது.
இரு தன் கரங்களால் அவளது கன்னத்தை தாங்கியவன், அவளின் இதழிற்கு அண்மையில் தன் இதழை கொண்டு வரவே, கண்களை வெட்கத்தால் மூடிக் கொண்டாள் உஷா. இதழும் இதழும் இணைக்க போன தருணத்தில்,
அரவிந்தின் தொலைபேசியோ அலறியது.
"இந்த நேரத்துல யாரு??" என்று கோபத்துடன் பார்க்க,
"home" என்று screen இல் வந்தது. அவளிடமிருந்து எழுந்து சற்றே தொலைவாக சென்று answer பண்ணான் அரவிந்த்.
அரவிந்த்தை முதலாவது கோப உருவில் கண்டாள் உஷா.
தூரத்தில் பேசுவதை ஒழுங்காக கேட்க முடியவில்லை ஆனாலும் ஏதோ சண்டை பிடிப்பது மட்டும் விளங்கியது.
"காணல்லயா?" என்று மட்டும் சொல் கேட்டது.
இதுவரை என்ன நடந்தது என்று அப்போது தான் யோசிக்கலானாள். அரவிந்த் எனக்கு propose பண்ணிட்டு, kiss பண்ண வந்தாரா?? எப்படி அவன அனுமதிக்க முடிந்தது என்னால்? Limit மீறி போகிறதே, அவனை பத்தி முழுதா எனக்கு ஒன்னும் தெரியல்லயே, அப்படி இருக்க எப்படி நான்...... என்று நினைக்கும்போது வியர்த்துக் கொட்டியது. அவன் என்னன்டாலும் அந்த rowdy கும்பலில் ஒருவன் என்றது மனது.

VOUS LISEZ
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Roman d'amourஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...