💖 Episode - 17 💖

967 47 18
                                    


என் பெற்றோருக்காக நான் ஆதவனை திருமணம் செய்ய முடியாது. அரவிந்த் உடன் பழகியது time pass க்கு இல்லையே. நான் எப்படி அரவிந்த்தை ஏமாற்ற முடியும்?? அவனை திருமணம் செய்யனும்னு தானே காதலித்தேன். என்று மனம் சொல்ல,
"உஷா, are you okay???" என்று அக்கா கேட்க,
" இல்ல அக்கா கொஞ்சம் தலைவலிக்குது" என்று நெற்றியை தடவிக் கொண்டு இருந்தாள்.
" சரிடா கொஞ்சம் rest எடுமா. நா சொன்ன விஷயத்த கொஞ்சம் யோசித்துப்பாரு. எனக்கு, உங்க அம்மாக்கும் ஆதவன எங்க வீட்டு மாப்பிள்ளையா எடுக்கிறதுக்கு விருப்பம். உன் விருப்பம் மட்டும் தான் பாக்கியா இருக்கு உஷா. நல்ல செய்தி ஒன்ன சொல்வன்னு நினைக்கிறேன்" என்று தகப்பனும் சொல்ல,
என்ன சொல்வதென்று கையும் காலும் வேலை செய்யவில்லை.
" சரி அப்பா. Give me time " என்று சொல்லிவிட்டு நழுவி விட்டு சென்றாள் உஷா.
அவள் போனபின், " அப்பா, அம்மா அவ கூட நா பேசி பார்க்குறேனே. அவட மனசுல ஏதாவது இருக்க இல்லையான்னு" என்று திவ்யாவும் சொல்ல,
" சரி திவ்யா. பேசி நல்லதா சொல்லு" என்று தந்தையும் கூறிவிட்டு வேறு தலைப்பை மாற்றி பேசிக் கொண்டு இருந்தார்.

அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு தொப்பென்று கட்டிலில் விழுந்தாள் உஷா.
ஒரு பக்கம் அரவிந்த். மற்ற பக்கம் அம்மா அப்பா ஆசை. என்ன செய்வேன் என்று புலம்பியபடி தொலைபேசியை தட்டினாள். அவளின் நேரத்துக்கு அரவிந்த்தும் எந்தவொரு message, call உம் செய்யவில்லை.
இவனுக்கு என்ன பிரச்சினையாம்? இன்னைக்கு ஒரு கை பார்த்து விடவேணும். அவனுக்காக நா இங்கே புலம்பிக் கொண்டு இருக்கேன். ஆனா அரவிந்த்துக்கு கணக்கும் இல்லை என்று call செய்தாள் உஷா. ஒருமுறை cut பண்ணாலும், மறுமுறையும் try பண்ணாள். அவன் answer பண்ணும்வரை call செய்து கொண்டே இருந்தாள்.
"என்னடி cut பண்ணா நா வேலயா இருக்கேன்னு தெரியாதா??" என்று அரவிந்த் சற்று குரலை உயர்த்தி கேட்க,
நான் இருக்கும் நிலை கூட இவர்க்கு விளங்காம சும்மா கத்துராரு என்று ஒன்றும் பேசாமல் call யை cut செய்தாள் உஷா. இன்னைக்கு இதற்கு பிறகு ஒரு call கூட பண்ண மாட்டேன் மனதில் சபதமும் கொண்டாள்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Where stories live. Discover now