💖 Episode - 24 💖

958 49 54
                                    


" உனக்கே தெரியாதபோ எனக்கு எங்க சாரி கட்ட தெரியும்??? But ஏதோ YouTube பார்த்து try பண்ணலாம் "
" ஆனா யாரும் கேட்டா என்னை மாட்டிவிடாதே நான் தான் சொதப்பினேன் என்று "
என்று YouTube இல் search செய்து ஒரு video வை play செய்தான். ஆதவன் சாரியை எடுத்து அதில் சொன்னவாறு முதலில் தனக்கு தானே சுற்றிப் பார்த்துக் கொண்டான் அவளுக்கு அணிவிக்க முன்.

முதலில் உஷாவிற்கு skirt இல் சாரியின் ஒரு பக்கத்தை சொறுகிக் கொள்ள சொல்லி, மற்றையதை blouse இன் மேலே போடவும் சொன்னான். பின் எஞ்சியிருந்த சாரியை எடுத்து, video வை பார்த்தபடி, விரல்களுக்கு இடையில் வைத்து fill வைத்து, உஷாவிற்கு சொறுகவும் அவள் கையிலே கொடுத்தான். அங்கே இங்கே செல்லும் தன் பார்வைகளை கஷ்டப்பட்டு கட்டிப்படுத்திக் கொள்ளவும் ஆதவன் மறக்கவில்லை. ஆதவனின் செயலை பார்த்து அவளுக்கே பூரிப்பானது. Blouse இன் மேலே போட்ட சாரியை மடித்து ஒழுங்காக உஷாவின் அவளின் அனுமதியோடு தோளில் அவனே போட்டுவிட்டு அழகிய pin ஒன்றை குத்தி விட்டான். கீழே குனிந்து சாரியின் fill யை ஒழுங்குபடுத்தியும் விட்டான். பின் உஷா கண்ணாடியின்  முன்னால் பின்னால் திரும்பி குறை ஏதும் சொல்ல பார்த்தாள் ஆனால் எந்தவித குறையும் சொல்வதற்கோ இருக்கவில்லை.
"thanks ஆதவா. நல்லா dress பண்ணி விட்டிருக்கீங்க. இனி உங்க கிட்டயே நா dress பண்ணி கொள்வேன்"
"அடப்பாவி, மத்தவங்கன்னா தெரியலன்னா பழகிக் கொள்வாங்க. ஆனா நீ... சரி அதற்கு பரவல்ல. அடுத்த நேரம் முழுசாவே நானே உடுத்தி விட்ரேனே" என்று சொல்ல, அவனது முகத்தை பார்க்காமல், நாணத்துடன் சிவந்தாள் உஷா.
" என்ன மேடம்??? சாரி உடுத்துட்டு நடக்க சரி தெரியுமா???" என்று அவளை பார்த்தபடி கேட்க,
" இல்ல தெரியாது. ஏன் நடக்க தெரியாதுன்னு சொன்னா தூக்கிட்டு போக போறீங்களா???"
" ஐயோ சாமி ஆள விட்ருமா. இந்த size எல்லாம் தூக்க என்னால முடியாது. நல்ல தின்டு தின்டு size ஆக வேண்டியது நாங்க இவங்கள தூக்கனுமாம். சும்மா போங்களே " என்று புன்னகைத்தபடியே அவனும் சொல்லி, தானும் தயாராக சென்றான்.
அதற்கிடையில் dressing table முன்னால் அமர்ந்து, simple hair style, charm makeup ஒன்று செய்து கொண்டு இருந்தாள் உஷா.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Where stories live. Discover now