இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆதவனும் வந்தான்.
இருவருக்கும் burger buns, submarines, snacks வாங்கி வந்ததை ஒரு plate இல் கொடுத்துவிட்டு, தானும் எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றான்.
கொஞ்ச நேரத்தில்,
"ஆதவா ஆதவா"
" சொல்லு உஷா."
" கொஞ்சம் மகாவ அவ வீட்டுல விட்டுட்டு வருவோமா???"
" சரிடா, வா" என்று கார் key யை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அவளை வீட்டில் விட்டு வந்து தன் வேலைகளில் ஆதவன் மூழ்க, நித்திரையானாள் உஷா.ஆதவனின் அலாரம் அடித்துக் கொண்டிருக்க,
"என்னடா இப்ப தான் தூங்கின போல இருக்கு. அதுக்குள்ள alarm ஆ " என்று முணங்கியபடி எழ, என் phone எங்கே?? இது ஆதவன்ட phone ஏ. நேரத்தை பார்க்க, காலை 8மணி. இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?? ஆதவன் எங்கே?? எழுப்ப சென்றபோது அவனும் இல்லை. ஆபீஸ் போயிருப்பானோ? ஆனா ஃபோனை வைத்துவிட்டு போவானா???" என்று யோசித்தபடி குளியலறைக்குள் புக, brush செய்து கொண்டிருக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில் ஏதோ note இருக்க, எடுத்து பார்த்தாள்.
Especially made for you, please enjoy your bath in bathtub என்று எழுதி இருந்தது.
பல்லை தீட்டியபடி, அவளும் சென்று பார்க்க, அதில் தண்ணீர் நிறைத்து ரோஜா இதழ்கள் தூவி வாசம் மூக்கை துளைத்த வண்ணம் இருந்தன. ஆதவனின் வேலை தான் இது. ஆனா என்ன especial என்று தான் தெரியவில்லையே யோசித்தபடி, அவனின் வேண்டுகோளுக்கு இணங்க அவளும் குளித்தாள். தலையை துடைத்துவிட்டு வரவே, கட்டிலில் ஏதோ இருக்க, வந்து பார்த்தாள். அதுவும் ஒரு note.
Usha, this is for you, please wear it என்று இருந்தது. கையில் எடுத்து பார்க்க, அவளுக்கு பிடித்த நிறத்தில் ஒரு long frock, charm design உடன், long sleeve வைத்து அழகாக இருந்தது. அதோடு ஒரு சின்ன box. அதில் என்ன என்று பார்க்க, அந்த நிறத்துக்கு match ஆகும் நிறத்துல சின்ன chain, earrings, bangles..
Wowwww ரொம்ப cute ஆக இருக்கு என்று ஆதவனின் ஆசைப்படியே, அந்த ஆடையை உடுத்து பார்க்க, அவளுக்கு ஏற்ற size இல் இருந்தது. அவளுக்கு தைத்தது போலவே. தலையை நன்றாக துடைத்து, இரு பக்கத்தில் இருந்து கொஞ்ச முடிகளை எடுத்து பின்னி விட்டு, அந்த chain, earrings, bangles களையும் போட்டு அழகு பார்த்தாள்.
Dressing table இல் இன்னொரு note.
" especial bouquet for you, take it come to guest room" என்று இருந்தது.
சரி என்று அந்த bouquet எடுத்து, உண்மையான ரோஜாக்களால் ஆன bouquet என்று மணமும் உணர்த்த, முகர்ந்தபடியே உஷாவும் சென்றாள்.

JE LEEST
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romantiekஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...