💖 Episode - 27 💖

937 47 55
                                    


அன்று அதிகாலை எழுந்து, ஆதவனிற்கு காலை உணவோடு பகலுணவையும் pack செய்து கொடுத்துவிட, வெகு நாளைக்கு பிறகு  ஆபிஸ் போவது போல feel ஆகியது ஆதவனுக்கு. வீட்டில் இருந்த வண்ணம் வேலை செய்வதும் ஒரு சுகம் தானே என்றது மனது.
"உஷா, அக்கா வீட்டுக்கு நீயும் தனியா போகனுமே. அதனால என் கூட வந்துரு. நா அப்படியே ஆபிஸ் போகும்போது drop பண்ணிட்டு போறனே" என்று சொல்ல,
அக்காவோட நிறைய time spend பண்ணலாமே என்று அவளும் ஒத்துக் கொண்டு, ரெடி ஆகினாள். சில நிமிடத்திலேயே பிறந்த நாள் ஆதவன் கொடுத்த long frock அணிந்து வந்தாள். தன்னுடைய உணவையையும் பொதி செய்து கொண்டாள் அக்கா வெகு நாளா நா சமைச்ச சாப்பாட சாப்பிடல்லன்னு feel பண்ணாவே என்று. இருவரும் சேர்ந்து காரில் பயணிக்க,
" உஷா, எனக்கு free ஆகினா call பண்ணே"
" உஷா, டைம்க்கு சாப்பிடே"
" உஷா, கவனமாக போய் வா"
" நா வேணும்னா, உன்ன கூட்டிட்டு போக வரட்டா??"
என்று 1000 அறிவுரைகளையும் சொன்னபடி, கேள்விகளும் கேட்கலானாள்.
தலையில் உஷா கையை வைக்க,
"ஏன் உஷா?? தலைவலியா?"
" இல்ல ஆதவா. நா ஒன்னும் சின்ன குழந்த இல்ல. அதுவும் நா நிறைய நாளைக்கு போகல்ல. Morning போய் evening வர இவ்வளவு கரிசனையா?? "
" ஏன் உஷா, நா அக்கறைப்படக்கூடாதா???"
" அக்கறை காட்டுங்க. ஆனா இதெல்லாம் ஓவர்டா" என்றாள் புன்னகைத்தபடி.
" ஐயோ சும்மா போங்களே. நா என் மனைவி எவ்வளவு கரிசனை காட்ட ஏழுமோ அவ்வளவு காட்டுவேன் " என்று அவனும் சொன்னான்.

அக்காவின் வீட்டில் விட்டு விட்டு அவனும் ஆபிஸ் கிளம்பினான்.
அக்காவை கண்ட அவளுக்கு ரொம்ப சந்தோசம். தேவையான எல்லா பணிவிடைகளையும் அவளே செய்து கொடுத்தாள். ஓரிரு முறை அக்காவின் வயிற்றையும் தடவி பார்த்தாள்.

" உஷா, உனக்கு இவ்வளவு ஆசன்னா, நீ ஏன் ஒரு குழந்த பெத்துக்க கூடாதா??" என்று கேட்க,
" அக்கா, உங்களுக்கே தெரியுமே. எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு. தேவைக்கு மட்டும் தான் பேசிக் கொண்டோம். ஆனா கொஞ்ச காலமா தான் friend ஆக பழக தொடங்கினோம். இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால தான் ஒத்தர ஒத்தர புரிந்து கொள்ள start பண்ணி இருக்கோம். அவர்ட விருப்பம், அவர்ட ஆசை எல்லாம் அறிந்து கொண்டு வாரேன். அதற்கிடையில்ல குழந்த எல்லாம் எப்படி அக்கா?? காதல்ல இரண்டு பேரும் சொல்லிக் கொள்ளவே இல்ல. நீங்க சொன்ன மாதிரி ஆதவன் ரொம்ப நல்லவரு அக்கா. அவன கிடைக்க கொடுத்து வைக்கனும். ஆனா அந்த நேரம் அவர பெரிசா புடிக்கல. உங்க எல்லோருக்கும் தான் திருமணம் முடித்தேன். அன்னைக்கு நீங்க வந்து புடிக்கலன்னா divorce கொடுத்துவிடுன்னு சொன்னபோது அந்த நேரம் அவர் இல்லாம நினைத்து பார்த்தேன். கணவரா இல்லாவிட்டாலும் எனக்கு துணையா இருந்தாரு. நா வாய் திறந்து சொல்லாமலே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வாரு. ஓரிரு பிரச்சினைகள்ள உதவி செய்ததுல இருந்து அவரோட நல்லாவே நெருக்கம் கூடிருச்சி அக்கா. மலேசியா tour என் வாழ்க்கைல்ல மறக்க முடியாத பயணம். நா மனசு விட்டு அவரோட அன்னைக்கு தான் பேசினேன். நா நினைத்தத விட, என்ன அவரு ஏத்துக்கிட்டாரு. அன்னைக்கு காய்ச்சல் வந்த நேரம் அக்கா நீங்க என்ன கடைசியா பார்த்து கிட்டீங்களே அத விட என்ன நல்லா பார்த்து கிட்டாரு. நாங்க போனதே அவர்ட conference காக தானே. அதையும் எனக்காக வீட்டுல இருந்து செய்தாரு. இப்படி நிறையவே... " என்று உஷா மனதிலுள்ள எல்லாவற்றையும் அக்காவிடம் கொட்டினாள்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Donde viven las historias. Descúbrelo ahora