💖 Episode - 28 💖

922 53 58
                                    


23 நம்பர் Mrs. மேகலா அரவிந்த் என்று இருந்தது.
"உஷா, உனக்கு வேண்டப்படட்டவங்களா இவங்க?? வேணும்னா என் duty time முடிந்து உன்னோட கதைக்கிறேன்" என்று அவளது வீட்டுமுகவரியையும் எழுதிக் கொடுத்தாள்.
தன் அக்கா தனக்காக காத்திருப்பார் என்று உடனே மருந்தை எடுத்துக் கொண்டு விரைந்தாள். அக்காவை வீட்டில் விட்டுவிட்டு, வீட்டை அடைந்தாள் உஷா.

வீடும் இருட்டாக இருக்க அவளது மனதும் ஏதோ இருட்டாக இருந்தது போல இருந்தாள். இரவுடையை அணிந்து கொண்டவள், கட்டிலில் புரண்டிருக்க அவளை அறியாமலே கண்கள் இருந்து கண்ணீர் வடிந்தது. எல்லோரும் சொன்னது போல அரவிந்த் என்னை ஏமாற்றினானா??? என் first love இப்படியாகிட்டே.. தப்பான ஒருவன லவ் பண்ணத நினைத்து வருந்துரேன் என்று நினைக்கும்போதே, ஒருவேள அக்கா மறுபடியும் சேர்ந்துட்டாவோ, ஆனா ஏன் அரவிந்த் மேகலாவின் வயிற்றை உரிமையோடு தடவிக் கொண்டு போக வேணும்???
வெளியூர் போறேன் என்று அரவிந்த் சொல்லி அதே ஊரில் வேறு road இல் இருப்பது போல, தன் மனைவியை அக்கா என்று சொல்வது பெரிய விஷயமல்லவே...
ஆனாலும் உண்மை என்ன என்று அறிந்து கொள்ள வேணும். ஃபோன் நம்பரும் கேட்கல்லயே. சென்றே விசாரிப்போம் என்று எண்ணுகையில் கதவு தட்டப்படும் சத்தத்துடன் ஃபோன் உம் ரிங் ஆகியது.
அப்போ ஆதவனாக தான் இருப்பான் என்று கதவை திறந்தாள் உஷா. பொதுவாக உஷா தனியே இருக்கும்போது கதவை திறக்காதே உஷா என்று சொல்லி இருக்கிறான் ஆதவன், நா call பண்ணவாறே கதவ தட்டின அது நானாக தான் இருப்பேன் என்றும்.

ஆம் அது ஆதவன் தான்...
உள்ளே நுழைந்தவன் bag யை உஷாவின் கையில் கொடுத்து விட்டு sofa வில் அமர்ந்து shoes யை கழற்றிக் கொண்டு இருந்தான். சில கணத்திலே தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, மடமடவென குடித்தான் உஷாவின் முகத்தை ஆராய்ந்தபடியே.
அறைக்குள் சென்று ஓரிரு கேள்விகளை கேட்டுப்பார்க்க, ஒத்த சொல்லே பதிலாக வந்தது. ஏதோ பிரச்சினையில் இருக்கிறாள் என்று சாப்பிடும் போது கேட்கலாம் என்று தான் fresh ஆக சென்றான் ஆதவன்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Tahanan ng mga kuwento. Tumuklas ngayon