வீட்டுக்கு வெளியே நிலாவெளிச்சத்தில் எல்லோரும் அமர்ந்து தங்களது சுவையான வாழ்க்கை அனுபவங்களை சொல்ல, அதை சிலர் கலாய்க்க வாய்விட்டு சிரித்தாள் உஷா. அதை பார்த்த ஆதவனிற்கோ பெருமகிழ்ச்சி.
நேரம் 11 30 தாண்டி இருந்தது. நேரம் போனது கூட விளங்கவில்லை. பயணக்களைப்பு ஒருபக்கமும், தூக்கமும் கண்ணை பிய்க்க, இருவரும் அறையை அடைந்தனர்.உள்ளே நுழைந்ததும் தான் பேரதிர்ச்சி. 6அடி கட்டில் ஒன்று, கதிரை 2, மேசையொன்றும், சின்ன cupboard. Bags வைக்க வந்த வேகத்துல பார்க்காம இப்ப தானே ஒழுங்கா பார்த்தார்கள் இருவரும். Cupboard யை திறந்து பார்க்க அது வெறுமையாகவே இருந்தது. "தான் இருவரும் ஒன்றாக கட்டிலில் தூங்குறல்ல, வேற ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கன்னு சொல்ல முடியாதே. அப்படி சொன்னாலும் எங்கள இரண்டு பேரையும் வித்தியாசமா பார்க்கக்கூடும். என்ன செய்வது?? " என்று ஆதவன் யோசித்துக் கொண்டு இருக்க, உஷாவோ சென்று கட்டிலை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். "இவள் என்ன பண்றாள்?" என்று அருகே சென்று பார்க்க, இருந்த 4 தலையணைகளில் இரண்டை அவரவருக்கு வைத்துவிட்டு, நடுவில் இரு தலையணைகளை வைத்து கட்டிலை பிரித்து," நீங்க அந்த பக்கம், நா இந்த பக்கம் தூங்குறேன்" என்றாள் உஷா. வியப்பாய் உஷாவை பார்த்து சிரித்துவிட்டு, ஆதவனும் தூங்கலானாள் ஊருக்கு வந்த முதல்நாளே நல்ல மாற்றம், ஏதோ ஒரு கட்டில்ல தூங்குறோமே என்று மனதில் நினைத்தபடியே.
காலையும் அழகாக மலர, உஷாவின் அலாரம் ஒலிக்கும்போது சேவல் கூவும் சத்தமும் கேட்டது. இனி அலாரம் வைக்கவும் தேவையில்ல போல என்று மனமின்றி கட்டிலில் இருந்து எழுந்தாள் உஷா. ஆனா ஆதவன் நல்ல உறக்கம். பாவம் அவ்வளவு தூரம் drive பண்ண tired ஆ இருக்கும் என்று போகும்வழியில் அவனது தலையை தடவி விட்டு, குளிக்க சென்றாள் உஷா. உடம்பில் நீர் பட, சில்லென்று குளிராக இருந்தது. "பொதுவா இந்த நேரத்துக்கு தானே குளிப்பேன். இப்படி குளிரா ஒருநாளும் உணர்ந்தே இல்லயே" என்று தன்னை மீறி பற்களும் நடுங்கவே, அதனை கட்டுப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சூடாக ஏதும் குடிக்கலாமென்று. அந்த நேரமே ஆதவனின் அம்மா, சித்திமார்கள் எல்லாம் காலை சமையல் வேலை.
" good morning, Usha. என்ன இவ்வளவு நேரத்தோட எழுந்துட்ட??"
" good morning அத்த. இந்த நேரத்துக்கு தினமும் எழுந்த பழக்கத்துல எழுந்துட்டேன்."
" ஆதவன் இன்னம் தூக்கமா???"
" ஆம் அத்த. நேத்துட driving tired க்கு நல்ல உறக்கம் போல" என்று பேசிக் கொண்டிருக்க,
"அதுக்கு எங்கட ஸ்னேஹாவும், இவங்கட பிள்ளைகளும் இந்த நேரத்துக்கெல்லாம் எழுந்துட்டாலும்.. உனக்கு boring என்றா நீ கொஞ்சம் சுத்திப்பாருடா. எங்கட வேலையாட்கள் தான் சுத்தி வர இருக்காங்க" என்று சொன்னபடி,
சித்தி உஷாவின் கையில் தேநீரை கொடுத்தார்.
"வெளிய போய் குடிக்கிறேன்" என்று mug ஐ எடுத்துக் கொண்டு சென்றாள் உஷா.

YOU ARE READING
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...