💖 Episode - 33 💖

940 41 31
                                    


எதிர்ப்பார்த்திருந்தது போலவே laneline ரிங்கானது. ஆதவன் பதிலளித்தான்.
" சொல்லுங்க"
........
"அப்படியா??? ரொம்ப சந்தோசம்.."
........
" சரி, நாளைக்கே பண்டித் ஒருவருக்கு வர சொன்னால் சரியே"
........
அழைப்பின் பதிலை கேட்டு சந்தோசமடைந்தாலும், ஆதவனின் வாயாலே கேட்க இருந்தனர் எல்லோரும். அதே போலவே அந்த நல்ல செய்தியை ஆதவனும் சொல்ல, எல்லோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்னேஹாவிற்கு சொல்லமுடியாத சந்தோசத்தை கண்கள் கண்ணீரை வடித்து சொன்னது.
" இந்த நல்ல செய்திய கொண்டாடனும்" என்று சித்தியின் மகள் சொல்ல,
மற்றைய சித்தியின் மகள் சென்று Fridge இருந்த sweets ஐ கொண்டு வரவே, எல்லோரும் ஸ்னேஹாவிற்கு ஊட்டிவிட்டு தாங்களும் உண்டனர். அன்றைய இரவு main topic ஸ்னேஹாவை வைத்து ஓட்டுவது தான் என்று முடிவு செய்து, இறுதியில் அவளை குங்குமமாய் சிவக்க வைத்தனர்.

எல்லாம் முடிந்து, ஆதவனும் உஷாவும் அறைக்குள் வந்தனர். நேற்று போல ஒழுங்குபடுத்தி உறங்க போன ஆதவன் சாய்ந்து 5நிமிடங்களிலே உறங்கியும் போனான். ஆனால் இன்றும் உஷாவிற்கு தூக்கம் போகவில்லை. ஒரு நாள் பழக்கிய பழக்கம் இன்னைக்கு தூங்கவிடுவதில்லையே என்று தனக்கு தானே ஏசிக் கொண்டு, புரண்டு புரண்டு தூங்க முயன்றாள். சரி ஆதவன் என் புருஷனாச்சே என்று அவனை நேற்று போலவே கட்டியணைத்து தூங்க, தூக்கமும் சென்றது. அதே போல காலையில் ஆதவனிற்கு உஷாவின் நடவடிக்கை மாட்டிப்படாமலும் இல்லை.

காலைல நல்ல தேதி நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்துக்கும் குறித்து விட்டு சென்றார் பண்டிதரோடு ராஜ் குடும்பத்தினர். நிச்சயதார்த்தம் இன்னும் இரண்டு நாட்கள்ள..
Simple ஆக செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். வீட்டினரும் எல்லோரும் பிஸியாக, அன்று மாலை நேரத்தில் ஊர் பொடியன்மார்களோடு கிரிக்கெட் விளையாட செல்ல தீர்மானித்தான் ஆதவன். எல்லா வேளைகளையும் நேரத்தோடே முடித்துவிட்டு. நிச்சயதார்த்தம் என்பதால் ஆதவனிற்கு பெரிதாக வேலைகளும் இருக்கவில்லையே.
"ஆதவா, கட்டாயம் விளையாட போகனுமா?? வீட்டுல பேசாம இரிங்களே" என்று கேட்க,
" மிச்ச நாளைக்கு பிறகு எல்லாரும் வெளியூர்ல இருந்து வந்திருக்காங்க. அதான் "
" ம்ம்ம். கவனமே. கவனம் ஆதவா"
" சரிடா. எத்தன தடவ கவனம்னு சொல்லிருக்க உஷா??? நா எல்லாம் யார் தெரியுமா?? படிக்கிற காலத்துல கிரிக்கெட் சாம்பியன். காலேஜ் காலத்துலயும் எங்கட team தான் கிரிக்கெட் சாம்பியன் " என்று பெருமை பேசிக் கொண்டிருக்க,
" சரி சரி ஆதவா.. போய் நல்ல play பண்ணிட்டு quick ஆ வாங்க " என்று jersey, bottom எல்லாவற்றையும் எடுத்து கொடுத்தாள் உஷா.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Where stories live. Discover now