💖 Episode - 39 💖

1.1K 53 74
                                    

" உஷா, எனக்கு பள்ளிக் கூடத்துல, ஏன் காலேஜ்ல கூட எத்தனையோ girls என்கிட்ட வந்து propose பண்ணாங்க. ஆனா நானோ யாரையும் தூசிக்கு கூட கணக்கு எடுக்கல. அந்த நேரம் படிப்பு தான் என் உலகமே. காதலித்தால் என் படிப்பு வீண்போகும் என்று பயந்து யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கவுமில்ல.
படித்து முடிந்து CEO வேலை செய்யும்போது தான் என்ட அப்பா உன்ன suggest பண்ணாரு. அப்படி என்ன தான் உன்கிட்ட இருக்குன்னு முதல் முதலா பட்டும்படாமலும் உன்ன கண்டேன். அதுவும் File கீழ விழுந்து papers collect பண்ணும்போது. பிறகு என் அப்பா இறந்த நேரம் நீ குடும்பத்தோட வந்த நேரமும் ஒழுங்காக பார்க்கல. உன் கம்பெனிய தாண்டி தான் என் கம்பெனிக்கு போகனும். அதனால கொஞ்சம் இருந்து சைட்டும் அடிக்கிறதுக்கு கார நிப்பாடுவேன். ஸ்னேஹா சொன்னது போல உன் photo கூடவே கொஞ்சம் காலம் வாழ்ந்தேன். காலச்சக்கரத்தால் உன்ட முகத்த முதன்முதலா கல்யாணத்துல கண்டேன். இவ்வளவு அழகான பொண்ணு என் மனைவியா கிடைக்க கொடுத்து வைக்கணும்னு பெருமையாக மனதிற்குள் நினைத்தும் கொண்டேன். என்னை தவிர எல்லார் கூட நீ பழகி பேசுவது கண்டு உனக்கு தெரியாம பார்த்து இரசிப்பேன். ஆனா நீ ஏன் என் கூட இப்படி react பண்வன்னு தெரியாம நிறைய தடவ தலையை பிய்த்துக் கொண்டு யோசிப்பேன். ஆனா என் காதல் உன்ன எப்போதாவது மாற்றும் என்றும், உனக்கு என்னுள்
காதல் வந்தால் சொல்லிவிடுவாய் என்று நம்புக்க வைத்திருந்தேன்.

அன்று உன்ட அப்பாவ பார்க்க போனேன் அப்பாட business சம்பந்தமா இருந்த doubts கொஞ்சத்தயும் clear பண்ண. அந்த நேரம் உன்ட அக்காவும் அம்மாவும் என் கூட பேசிட்டு இருந்தாங்க. இரண்டு பேரும் பெரிசா சந்தோசமா இல்லாம, வெளிஉலகத்துக்கு கணவன்-மனைவியா வாழ்ற மாதிரி இருக்கு. ஏதும் உங்களுக்கு இடைல பிரச்சினையா?? கல்யாணம் பேசும்போதே அவளுக்கு உங்கள்ள இஷ்டமிருக்கல. தம்பி, உங்க வாழ்க்கையையும் நாங்க சுயநலத்தால நாசமாக்கிட்டோம்னு உங்க அம்மா புலம்பிட்டு இருந்தாங்க. எனக்கும் என் தங்கைட பிரச்சின என்னன்னு விளங்குதில்ல, எத்தனையோ தடவ கேட்டுட்டேன். ஆனா சொல்றாளே இல்ல என்று உங்க அக்காவும் சொன்னாங்க. நானும் ஏதோ சமாளித்து வந்தேன்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Where stories live. Discover now