"உஷா, நா கார park பண்ணிட்டு வர்ரேன்" என்று உஷாவை இறக்கிவிட,
" நீங்க Mrs. Aadhawan??? " என்று கேட்க,
அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.
கையிலிருந்த roses bouquet யை உஷா விடம் கொடுத்து, போக வேண்டிய திசையை கையால் காட்ட அவளும் சென்றாள்.அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த தோட்டத்தில் பெரிய இதயவடிவமொன்றால் stage ஒன்று செய்யப்பட்டிருந்தது. அதன் அருகே மரத்தாலான சிறிய அழகிய மேசையொன்றும் இருகதிரைகளும், உயரமான மரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலொன்றும் கூடவே இருந்தது. அருகே ஓடிக் கொண்டிருந்த அருவியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படகொன்றும் இருந்தது.
எல்லாவற்றையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த உஷாவை ஆதவன் தட்டவே, உலகிற்கு வந்தாள்.
"ஆதவா இதெல்லாம்????"
" எல்லாம் உனக்கு தான் உஷா. என் காதல்ல இங்க உன்கிட்ட சொல்லனும்னு நினைத்தேன். நேத்து evening fixed பண்ணி இருந்தேன். கடைசில இன்னைக்கு மாத்திட்டேன்"
" I am really surprised, ஆதவா. அப்போ நா உங்களுக்கு propose பண்ணி இருக்காவிட்டால், நீங்க பண்ணி இருப்பீங்களே. So sweet of you"
" evening ரொம்ப அழகா இருக்கும்டி. Room book பண்ணத நேத்து cancle பண்ணிட்டேன். இன்னொரு நாளைக்கு வரலாம்" என்று இருவரும் மனம்விட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த அழகிய location விதம்விதமாய் தன்னவளை புகைப்படத்திற்குள் சிறையும்பிடித்தான். ஊஞ்சலில் ஆட்டியும், படகில் இருவரும் பயணம் செய்தும், பகலுணவு சாப்பிட்டும் அன்றைய பகல் பொழுதை அழகாக கழித்தனர்.ஸ்னேஹாவின் திருமண வேலைகளும் தடல்புடலாக செய்யப்பட உஷாவும், ஆதவனும் busy ஆகினர். ஆதவன் Bedroom இற்கு வந்த நேரம் உஷாவும் ஏதோ வேலையில் இருந்தாள்.
"ரொம்ப நேரம் என் பொண்டாட்டிய காணல்லடி " என்று அவளது கன்னத்தை தன் இருகைகளால் இறுக்கி, கன்னத்தின் இருபக்கமும் முத்தமிட்டு பறந்தான் ஆதவன். அவனது குறும்புத்தனத்தை எண்ணி சிரித்தபடியே தன் வேலையை செய்தாள் உஷா. இப்படியே தங்களை கவனிக்கவும் தவறவில்லை.அவர்கள் தயாரான அன்றைய நாளும் வந்தது. தந்தையின் படத்தின் கீழ் விழுந்து கலங்கிய கண்களோடு ஸ்னேஹா ஆசிர்வாதம் பெறவே, ஆதவனோ ஆறுதலுக்கு அவளை அணைத்து, கரம்பிடித்து திருமண மண்டபத்தில் உட்கார வைத்தான்.நல்ல முகூர்த்தத்தில் ராஜ் ஸ்னேஹாவின் கழுத்தில் தாலி கட்ட, தங்கள் காதல் ஜெயித்த சந்தோசத்தில் இருவரும் மிதந்தனர்.
ஸ்னேஹாவும் ராஜும் பொருத்தமான ஜோடி என்றும் எல்லோரும் புகழும்படி, நல்லபடியாக கல்யாணமும் நடந்தது.
ஸ்னேஹாவிற்கு தந்தை இல்லாத குறையை ஆதவனோ நிவர்த்தி செய்து வைத்தான்.
உஷா ஸ்னேஹாவை பார்த்துக் கொண்டிருக்க, ஆதவன் அருகே வந்து,
" பொண்டாட்டி, again கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று குறும்புப் பார்வையுடன் கேட்டான் ஆதவன்.
" புருஷா, புதுசா கல்யாணம் பண்ணி இரண்டு கிழம கூட ஆகல்ல, அதுக்குள்ள இன்னொன்றா??? ஆள விட்ருங்க" என்று சிரித்தபடியே அவளும் சொன்னாள்.
இவர்களின் சீண்டல்களையும், சிரித்து பேசி சந்தோசப்படுவதையும் கண்ட உஷாவின் பெற்றோர்கள் மகிழ்ந்தனர்.
பின்னர், ஆதவன் தன் தங்கைக்கு மலேசியாவிற்கு ஒரு கிழமைக்கு honeymoon டிக்கெட்டினையும் பரிசளித்தான். நாட்கள் பறக்க, ஒரு கிழமையில் ஆதவனும் உஷாவும் தங்களது வீட்டுக்கு புறப்பட்டனர்.

STAI LEGGENDO
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Storie d'amoreஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...