கறுப்பு ரோஜாவை தன் வாயால் கடித்து வைத்துக் கொண்டு கறுப்பு நிற குட்டை பாவாடை அணிந்த ஒரு பெண் பேபி என்ன நெருங்கு வா எனக்கு முத்தம் குடு டா என முனங்கல் குரலில் சொன்னவள் கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடிக்க. அவள் வயிறு பெரிதானது. அவள் ஆ .... என வீரிட மிஹிகா என கத்திக் கொண்டு எழுந்தான் அலெக்ஸ். முகம் முழுவதுமாக வியர்த்து இருக்க பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை திறந்து குடித்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். அவன் மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடித் திரிந்தன. மிஹிர் அரோரா ஒரு மிகப்பெரிய புகழ் பெற்ற ஒரு நடிகன். வயது ஒரு 37 இருக்கும். இருந்தாலும் பார்க்க ஒரு முப்பது வயது கம்பீரத் தோற்றம். பல வசூல் படங்களை கொடுத்தவன். வட இந்தியாவில் இவனுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமுன்று. ஆனால் கனவில் பயமுற்ற அந்த நொடிகள் அவனும் ஒரு சாதாரண மனிதன் தான் என எடுத்துக் கூறியது. அவன் ஒரு ஃப்ரேம் செய்த ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தான். அதில் அவனை அணைத்தபடி ஒரு இளம்பெண் இருந்தாள். அவளது நீல நிற வசீகரக் கண்ணிலேயே அவன் பார்வை ஒட்டியிருந்தது. ஆம் அவள் தான் இவனை கனவில் எழுப்பியவள் மிஹிகா. அவனது காதலி.ஃபோட்டோவை பார்த்தபடி இருந்த மிஹிரின் எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி காலப் பயணம் மேற்கொண்டன. என்ன பாத்துப்பியா பேபி? உன்ன ரொம்ப லவ் பண்றேன் டா என மிஹிகா கேட்க. சிரித்தபடி மிஹிர் அவள் இதழைக் கவ்வினான். இருவரும் கட்டிலில் ஒன்றாக இருந்த அத்தருணம் நள்ளிரவு 12 மணியை நோக்கி சுவர்க் கடிகார முற்கள் தன் பயணத்தை மேற்கொண்டு இருந்தன. இரு முற்களும் 12 மணியை எட்ட அந்த பழங்கால கடிகாரம் டிங் டாங் என அடித்தது. கட்டிலை விட்டு எழுந்த மிஹிர் விஸ்கி பாட்டிலை நெருங்கினான். அந்த பாட்டிலை எடுத்து ஒரு கண்ணாடிக் குவளையில் சிறிது நிரப்பியவன் ஹனி வாண்ட் அ ட்ரிங்க் என கேட்க வேண்டாமென கை அசைத்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள் மிஹிகா. நாளைக்கு நம்ம படம் ஷூட் ஆரம்பிக்க போகுதுல்ல என சிகரெட்டை தட்டினாள். ஆமா நாளைக்கு சரியா பதினொரு மணிக்கு என சொன்னான் மிஹிர். டேய் நீ ஸ்மோக் பண்ணவே மாட்டியா ட்ரிங்ஸ் மட்டும் அடிக்குறே என கேட்க. எனக்கு ஸ்மோக்ஸ் பிடிக்காது அப்பப்போ ஒரு ஸ்டஃப் மட்டும் அடிப்பேன் ஸ்ட்ஃப்போட கிக் சிகரெட்ல வராது என குவளையை காலி செய்து மேசை மீது டொப்பென வைத்தான்.
....................................................................
நினைவுப் பொறியிலிருந்து கழன்று வெளி வந்தான் மிஹிர். பின்னர் சில மருந்து வில்லைகளை எடுத்து குடித்தான் மிஹிர். சில நிமிடங்களில் உறங்கிப் போனான். அழகிய ஒரு நீரோடை மலையின் மேலிருந்து இன்னிசை பாடியவாறு கீழ் நோக்கி பாய்ந்தது ஒரு யௌவன முனிவனாய் அவன் வேடம் தரித்து அந்த சிற்றோடையின் அருகில் தியானம் செய்தான். சலங்கை ஓசை கேட்டு அவன் தவம் கலைந்தது. கண் திறந்து பார்க்க எதிரே ஒரு கிராமத்து இளம் யுவதி அந்த நீரோடையில் குடத்தில் நீர் பிடித்தாள். அந்த பெண் மிஹிக்கா தான். நீல நிறக் கண், கரு நீலக் கார்மேகக் கூந்தல், அவள் நீரை சேகரிக்கையில் துள்ளிக் குதித்த நீரின் சில துளிகள் அவளின் மெல்லிடையினில் ஓர் சிற்றிடத்தை கைப்பற்றின. அந்த நீர்த் துளிகளில் ஒளிப்பட்டு மிக நுண்ணிய ஏழு நிற நுண் வானவில்லை உருவாக்கியது. நீர் சேர்த்து குடத்தை தன்னிடையில் அவள் சுமந்து அவள் திரும்ப இந்த யௌவன முனிவனைக் கண்ணுற்றாள். வைரம் பாய்ந்த பலம் கொண்ட தேகம் , அடர்ந்த தாடி பொழிவான தங்கத் தோல் , அவரவரின் வண்ண வசீகர குணங்கள் ஒருவருக்கொருவர் ஈர்த்துக் கொண்டன. தன் முடியை முடிந்து அவன் கட்டிக் கொள்ள அவள் சலங்கை கட்டிய தன் வலது காலை தூக்கி ஆட்டிட ஜல் ஜல் என சத்தம் உண்டானது. கண் மூடி பெரு மூச்சு எடுத்தவன் அந்த சலங்கை மணிகளின் நுண்ணிய ஒலியை கணக்கிட்டான். பின் அவளைப் பார்த்து அவன் சிரிக்க. இவள் நாணச் சிரிப்புடன் திரும்பினாள். அவளை நெருங்கியவன் அவளது இடையோரத்தில் இருந்த ஒற்றைத் துளி நீரை தன் விரலால் சுண்டிட பயந்து அவள் குடத்தை கீழே விட கால் தடுக்கி விழப் போனவளின் கையைப் பற்றினான். அவள் அவனை திரும்பிப் பார்த்து பின் வேறொரு திசையை நோக்க அங்கொரு சிறு குடிசை காணப்பட்டது. அக் குடிசை ஒரு உயரிய இடத்தில் காணப்பட்டது. தூரத்தில் பார்க்க குடிசையின் கூரை வானை தொடுவது போல தெரிந்தது. அவள் நடக்க அவளை இவன் தொடர்ந்தான். அந்த குடிசையினுள் இருவரும் நுழைய கதவு மூடப்பட்டது. ஈரிதழும் கோர்ந்து பிடிப்புகள் இறுகின. ஊடல் அதிகரித்து கூடலானது. அவளின் சந்தோச மூச்சொழிகள் அமைதியை கலைத்தன. கூடல் முடிய தன் பிரம்மச்சரியம் கலைந்த விரக்தியுடன் திரும்பினான். அப்பொழுது அவள் தன் ஆடையை சரி செய்து எழும்பிட. அவளுக்கு முகம் கொடுக்காது எழுந்தான். அந்த கொடூர நொடிகள் அப்பொழுது ஆரம்பித்தன. அந்த குடிசைக் கதவுகள் எரிந்து கீழே விழுந்தன. நெருப்பை கொண்ட கண் பாவைகளுடன் ஒருவன் உள் நுழைந்தான். அவனது கோபத்தின் உஷ்ணம் தீயாய் பரவ அவள் பற்றிச் சாம்பலானாள். இவன் அவளைப் பார்த்து திரும்பி கண்களை அகல திறக்க பெருமூச்சோடு மறுபடியும் எழுந்தான் மிஹிர். பற்பல குழப்பமான கனவுகள் இவனை ஆட்கொள்ள குழப்பம் அவனை சில நொடிகள் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள இவன் நேரத்தை பார்க்கையில் மணி நான்கு என கடிகாரம் காட்டியது.அதே நேரம் பிரான்சில் ஒருவன் பியானோ வாசித்தான். அதன் பின் பாடினான். அவனது இசையில் மூழ்கிய பார்வையாளர்கள் அவனது மனம் மயக்கும் குரலுக்கும் அவனது மனங்கவர் இசைக்கும் அடிமையாகி ஒரு முக்தி நிலையை அடைந்தனர். இசை ஒரு மனிதனை ஒரு தியானம் கலந்த முக்தி நிலைக்கு கொண்டு செல்லுமா என ஆச்சரியத்தினை உண்டு பண்ணியது அவன் இசை. யாரது ? ஆம் மிஹிரின் கனவில் பயமுறுத்தியவன் தான் இங்கு இசையில் மக்களின் மனம் கவர்ந்தான்.
அந்த நேரமே அனைவரும் லோஹித் லோஹித் லோஹித் என்று அவன் பெயரை தாளமாக சொல்லி அவனை கொண்டாட அவர்கள் முன் பணிந்து மரியாதை செலுத்தி புல்லாங்குழலில் இசை இசைத்து அந்த கான்ஸர்ட்டை முடித்தான்.
தொடரும்....