பிணவறை....
ஐயோ...என் புள்ள..😭😭😭கடவுளே 5 வருட தவம் இருந்தது இப்படி அல்பாயுசுல போறதுக்கா 😭😭😭.....கடவுளே..உனக்கு என்ன குறை வச்சேன்...என் புள்ளைய இப்படி கொண்டு போய்ட்டியே😭😭😭தாயின் அழுகை
நான் பெத்த மகளே...என் ராசாத்தி அப்பாவ பாருடா கண்ணா...😭😭😭
வாடா கண்ணா...அய்யயோ..😭😭😭
தந்தையின் கண்ணீர்.....உறவினர்களின் கூக்குரல்..😭😭😭 பக்கத்தில் கண்களில் வழியும் கண்ணீரோடு சடலமாய் கிடக்கும் மனைவியையும் அவளது 8 மாத வயிற்றுக்குள் உலகம் காணாமலே உயிரை நீத்த தன் மகவையும் வெறித்து கொண்டு இருந்தான் அவள் கணவன்😭😭😭😭....
நடப்பது அனைத்தையும் வெறித்த கண்களோடு பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள் தீ என பத்திரிக்கை உலகில் அழைக்கப்படும் யுக பாரதி ... இந்த 1 மாதத்தில் 3வது மரணம்...
இயற்கையான மரணம் என்று ரிபோர்ட் சொன்னாலும் அவள் மனம் ஏனோ ஏற்க மறுத்தது...3 மரணங்களுக்கும் காரணம் வேறு வேறாயினும் இறந்தது அனைத்தும் கர்ப்பிணி பெண்கள்...
முதலில் இறந்த பெண் 8 மாதத்தில் வலி வந்து குழந்தை வெளியே வருவதற்குள் மூச்சு திணறி இறந்தாள்...இரண்டாம் பெண்...9 மாதம் திடீரென நெஞ்சு அடைத்து ஆஸ்பத்திரி வரும் வழியில் இறந்தாள்....
இது மூன்றாவது முதல் பெண் எப்படி இறந்தாளோ அப்படியே இறந்துள்ளாள்....
மருத்துவமனை அறிக்கை தெளிவாக உள்ளது...மூச்சு திணறல் ,நெஞ்சடைப்பு தான் மரணத்துக்கு காரணம் என...
அது எப்படி மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேற்றத்தில் உள்ளது..இந்த காலத்தில் ஒரே மாதத்தில் ஒரே ஆஸ்பத்திரியில் இப்படி மரணங்களா??அதுவும் சாகும் நிமிடத்துக்கு முன்வரை நல்ல ஆரோக்கியமாக இருந்த பெண்கள் என்று மகப்பேறு மருத்துவர் சொல்லுகிறார்...
தோழி மனதில் என்ன ஓடி கொண்டு இருக்கிறது என தெரியாமல் அவளையும் பார்த்து கொண்டு இறந்த பெண்ணின் உறவினர்களிடமும் பேட்டி எடுத்து கொண்டிருந்தாள் தீயின் தோழி விவேகா....

YOU ARE READING
முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
Short Storya suspense police love story ..read பண்ணி பாருங்க😊