விடாமல் துரத்துராளே!! 5

1.8K 53 4
                                    

விடாமல் துரத்துராளே 5

தியா வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது... தேவா வீட்டில் அனைவரும் சிரித்து பேசி கொண்டே சாப்பிடுவதை தான், அவளுக்கு அவர்களை பார்க்கும் போது கோவமாக வந்தது... குடும்பத்தில் உள்ள ஒருவனை தனியாக ஒதுக்கி விட்டு இவர்களால் எப்படி சிரித்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று தோன்றியது... அங்கு இருக்கவே பிடிக்க வில்லை... தனது அக்காவிற்காக அந்த ஒரு நாளையும் கடினப்பட்டு அந்த வீட்டில் கழித்தாள்...

தனது வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய தேவா... தனது கோவத்தை எல்லாம் காரின் மீது காட்டி வேகமாக ஓட்டி கொண்டு வந்தான்... அந்த வீட்டின் கேட்டின் முன்பு காரை நிறுத்தியவன் கீழே இறங்கி கேட்டை திறந்து விட்டு, மறுபடியும் காரில் ஏறி காரை ஓட்டி வந்து உள்ளே நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்... வீட்டுக்குள் போக கதவை திறக்க பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கதவருகே செல்ல, கதவு லாக் ஏற்கெனவே திறந்து இருந்தது... யாராக இருக்கும் என்பது அவன் அறிந்ததே, அதனால் கோவமாக உள்ள நுழைந்தான்...

அது ஒரு அழகான சிறிய வீடு... தேவாவுடையது அவன் தங்கி இருக்கும் வீடு... வீட்டுக்கு வெளியே கேட்டில் இருந்து வீட்டு முகப்பு வரை கார் வர கற்கள் பதிக்கப்பட்ட தரை, இருபுறமும் கார்டன் அமைக்கப்பட்டு இருந்தது... வீட்டுக்குள் கீழே பெரிய ஹால் வலது புறம் கிச்சன்... அதை ஒட்டிய டைனிங் ஹால்... இடது புறம் இரண்டு படுக்கை அறை, ஒரு பூஜை அறை அது எப்போதும் பூட்டப்பட்ட இருக்கும்...மேலே மாடியில் இரண்டு படுக்கை அறை அவ்வளவே, ஒரு குட்டியாக இருந்தாலும் அழகாக இருக்கும்...அங்கு ஒருவன் மட்டுமே தங்கி இருக்கிறான்... வேறு யாரும் கிடையாது... வேலைக்கு கூட ஒரு ஆள் கிடையாது...‌ அவன் தனிமையை அது கெடுக்கும் என்பதால் யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை... அவன் தேவைகளை அவனே கவனித்து கொள்வான்...

வீட்டுக்குள் வந்த தேவா நேராக மாடியேறி ஒரு அறையை திறந்து பார்க்க மெத்தையில் அங்கு ஒரு உருவம் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து இருந்தது... உள்ளே வந்தவன் தனது ஷீ வை கழற்றி விட்டு அந்த உருவத்தை எட்டி உதைத்தான்... அதில் கீழே விழுந்தவன் அய்யோ அம்மா என்னை யாரோ பள்ளத்துல தூக்கி போட்டுட்டாங்க என்று தூக்க கலக்கத்தில் கத்தியபடி கண்ணை திறந்து பார்க்க, அப்போது தான் கீழே விழுந்து கிடந்தது புரிய மெல்ல எழுந்து திரும்பி பார்த்தான்... அப்போது தான் தேவா அங்கு முறைத்து கொண்டு நிற்பது தெரிந்தது...

விடாமல் துரத்துராளே!!Tahanan ng mga kuwento. Tumuklas ngayon