விடாமல் துரத்துராளே 10தேவா தனக்கு ஹச் ஐ வி என்று சொல்லி விட்டு தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். அதை கேட்ட தியாவிற்கு தான் பெரும் அதிர்ச்சி. அவளின் இதயமே துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியது… இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமல் கண்கள் கண்ணீரை வெளி ஏற்றியது... தேவாவிற்கு தியாவின் கண்ணீரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அவன் இவ்வாறு கூறியதும் அவள் எழுந்து ஓடி விடுவாள் இனி தன்னை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று நினைத்து தான் விளையாட்டாக கூறினான். ஆனால் தியா அதை உண்மை என நினைத்து அவள் அழுவாள் என்று நினைக்கவில்லை.. தனக்காக இவள் கண்களில் ஏன் இந்த கண்ணீர் என்ன காரணம் என்று கேள்வி எழுந்தாலும் அமைதியாக இருந்தான்...
தியாவோ தேவா சொன்ன இந்த இரண்டு மூன்று நொடிகளுக்குள் ஓராயிரம் தடவை கடவுளை திட்டி இருப்பாள். என் பாவாவிற்கு ஏன் இப்படி என்று, அப்போது பக்கத்து டேபிளில் இருந்து ஒரு சத்தம் வந்தது. அங்கு இரு ஒரு குழந்தை தனது அண்ணனிடம் டேய் பொய் சொல்லாத, நீ சொல்றது பொய் என்னை ஏமாத்த பார்க்குற என்றது. அது தியா காதில் விழுந்தது. பின்பு தான் உலகின் எட்டாவது அதிசயமாய் அவள் மூளை வேலை செய்தது. ஏன் அவன் பொய்யுரைத்து இருக்க கூடாதென்று,
பாவா நீங்க பொய் தானே சொன்னீங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லைல. நீங்க என்னை ஏமாத்தறதுக்காக விளையாடீடா தானே சொன்னீங்க என்று கேட்டாள்.. ஆம் பொய் தான் என்று கூறி விட மாட்டானா என்ற ஒரு வித தவிப்புடன்.ஏய் எனக்கு வேற வேலை இல்லை பாரு உன் கூட பொய் சொல்லி விளையாடிட்டு இருக்க. பைத்தியம் என்று தேவா திட்ட, இல்ல இல்ல நீங்க பொய் தான் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன்.. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். அதுவே பெரிய விஷயம். எதோ நான் நல்ல மூட்ல இருந்ததால் சொன்னேன்.. அதை நீ நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்.. இனிமே என்னை தொந்தரவு பண்ணாத. ப்ராமிஸ் பண்ணிருக்க மீறினேன்னு வையேன் சாமி கண்ணை குத்துதோ இல்லையோ நான் குத்துவேன். மறுபடியும் எல்லா ஐட்டமும் ஆர்டர் பண்ணிட்டு போறேன் பாப்பா எல்லாத்தையும் நல்லா சாப்பிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் சேரு என்று கூறி விட்டு எழுந்தான்.

DU LIEST GERADE
விடாமல் துரத்துராளே!!
Romantikதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...