விடாமல் துரத்துராளே!! 12

1.4K 56 2
                                    

விடாமல் துரத்துராளே 12

தேவா வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. அவன் தான் அப்படி எல்லாத்தையும் போட்டு உடைத்து வீட்டையே தலைகீழாய் மாற்றி இருந்தான். பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறியது என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதே நிலை தான் இப்போது தேவாவின் நிலைமை. அவன் தியாவை விலக்க வேண்டும் என்று நினைத்து இங்கே வரவழைத்தாள் நடந்தததோ வேறு. அவன் தியாவிற்கு எதிராக வீசிய அனைத்தை பாலையும் அவள் சிக்சராய் அடித்து நொறுக்கினாள்.
கடுகு சைஸ்ல இருந்துட்டு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டேவே லவ் பண்றேன் சொல்லுவா லூசு பைத்தியம் மெண்டல் என்று திட்டி விட்டு கோவத்தில் அருகில் இருந்த பொருளை கீழே தள்ளி விட்டான். 

நான் இனி காற்றில் பறக்க
போகின்றேன் 🎶
கூடவே உன் கைகள் பிடித்து கொள்வேன்🎶
இந்த பிரபஞ்சம் தாண்டியே
ஒரு பயணம் போகலாம்🎶
அதில் மூச்சு கூட தேவையில்லை
முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்🎶

மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்🎶
அசந்து அசந்து நின்றேன்
அய்யோ அளந்து அளந்து கொன்றாய்🎶
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவற்றில் தூசி போல படிகின்றேன் மடிகின்றேன் 🎶

என்று காதலிக்கதவர்களை கூட காதலிக்க வைக்கும்  மனதை உருக்கும் யுவனின் இசையில் வந்த காதல் கீதம் பின்னணியில் தியாவின் மனநிலைக்கு ஏற்ப ஓட

அதை கண்மூடி ரசித்தபடி தியா  இடது கையால் தன் கன்னத்தை கைகளில் தாங்கியபடி அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருக்க, அவளுக்கு எதிரே தேவா வீட்டில் இருந்த அந்த பெண் அமர்ந்து இருந்தாள். சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தனர்.அந்த பெண்ணின் பார்வை முழுவதும் தியா கன்னத்திலே இருந்தது. ராமர் அணிலுக்கு மூன்று கோடு போட்டது போல் தேவாவும் தியாவிற்கு அவள் காதலை சொல்லியதற்கு கன்னத்தில் பரிசு கொடுத்து தான் அனுப்பி இருந்தான். அவன் அடித்த அடியில் கன்னம் சிவந்து கன்றி இருந்தது.

விடாமல் துரத்துராளே!!Wo Geschichten leben. Entdecke jetzt