ரத்தம் ஏதும் சிந்தாத... சரித்திர கதை ஒன்று எழுதிட ஆசை உண்டு என் நெஞ்சில்...
வாள் வீச்சில்... ஆயிரம் பேரை எதிர்த்த வீரனவன்... பாவையவளின் விழி வீச்சினை தாங்காது தவித்த கதையிது.. .
தன் முன்னே ஆயிரம் பேர் அடிபணிந்து நிற்க.... மஞ்சள் பூசிய.. அந்த மங்கயின் முன்னே அடிமையாகி போன ..அந்த வீரனின் கதையிது... அவனே.... தீரன்...
இந்த கதையில் வரும் அனைத்துமே..எனது கற்பனை... இதில் இடம் பெரும் நாடு... இந்த காதல் காவியத்திற்காக...நானே எனது கற்பனையில் உருவாக்கி... தீறனுக்கு பரிசளித்த நாடு...
இது யார் மனதையும்..எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுத்தப்பட்டது அல்ல...வெறும் கற்பனையே...
தீரன்... 1
நஞ்சுண்ட வண்டாய்...
நெஞ்சில் குடையும் அவள் நினைவு...
நெருங்கி வர நினைக்கையில் எல்லாம்
நெருப்பென பொசுக்கிடும் அவள் விழிகள்...
மதுவுண்ட போதையை விட...
மாயை தரும் அவள் அதரங்கள்...
சொல்லி சொல்லி மாய்ந்து போனேன்...
மாய்ந்து நான் சாயும் முன்...
ஒருமுறை கூறிவிடடி....
நானே உன் காதல் என்று...
தேவி.... அடியே தேவி...
தன் காதிற்கு அருகில் கேட்ட.. அந்த குரலில்... அத்தனை நேரம்.. தன்னை சுற்றி இருந்த மாய நந்தவனத்திலிருந்து சடுதியில் மீண்டெழுந்தாள்.. அவள்..
தன்னை சுற்றி நின்று...தன்னையே பரிகசத்துடன்.. பார்த்து நிற்கும்..தன் தோழியரை... ஏதும் புரியாமல் பார்த்தாள்..அவள்...