விடாமல் துரத்துராளே 20

1.6K 63 18
                                    


விடாமல் துரத்துராளே 20

மறுநாள் காலை உறங்கி கொண்டு இருந்த வெண்ணிலா போன் அடித்தது.. அதில் உறக்கம் கலைய புரண்டு படுத்தாள்… திரும்ப திரும்ப விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க
சே யாரது காலங்காத்தால ஒரு தடவை போன் எடுக்கலைன்னா விடமா நொய் நொய்னுட்டு என்று சலித்தபடியே கண்ணை திறக்கமால் கை நீட்டி போனை எடுத்து அட்டன் செய்து ஹலோ என்க, எதிர்முனையில் இருந்தவர்கள் சொன்ன சேதியில் அடித்து பிடித்து எழுந்தாள்...

ஏய் இப்ப மட்டும் நீ நேர்ல இருந்திருந்தா உன்னை சாவடிச்சிருப்பேன் பைத்தியம் பைத்தியம் நைட்டு ஏதாவது தண்ணிகிண்ணி அடிச்சியா ஏன் இப்புடி ஊளறிட்டு இருக்க என்று எதிர்முனையில் இருந்த தன் தோழியை திட்டி கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தி சேனலை போட அதில் கூறிய தலைப்பு செய்தியை கேட்டவளின் கையில் இருந்த மொபைல் நழுவி கீழே விழுந்து உடைந்தது…

நேற்று இரவு திரும்ப மருத்துவமனை வந்த தேவா செக்யூரிட்டி மூலம் அங்கு நடக்கும் விஷயங்களை அறிந்தவன் அந்நொடியே மகேஸ்வரனுக்கு இதை பற்றி சொல்ல தன் மொபைலை தேட, அதை அவன் மோதிரம் எடுக்க வந்த அவசரத்தில் வீட்டிலேயே விட்டுட்டு வந்து இருந்தான். அதனால் செக்யூரிட்டி மொபைலிலே இருந்தே மகேஸ்வரனுக்கு அழைத்து விஷயத்தை கூறி மருத்துவமனை வர சொல்லி விட்டே தியாவை வைத்து இருந்த அறைக்கு சென்றான்…

அந்த பெரிய வராண்டாவில் உள்ள சேரில் கண் மூடி நெற்றியை வலது கரத்தில் தாங்கியபடி அமர்ந்து இருந்தான்… அவன் நினைவு முழுவதும் வெண்ணிலா சுற்றியே இருந்தது… தேவா தள்ளி விட்டதில் பின்னந்தலையில் பலமாக அடிபட்டதில் அந்த நொடியே ஜீவா உயிர் பிரிந்தது… செக்யூரிட்டி மூலம் விஷயம் அறிந்ததும் ஜீவாவை தடுக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தான்… இதை தேவா சற்றும் எதிர்பார்க்கவில்லை… மருத்துவனாய் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய தன்னாலே ஒரு உயிர் போனது அதுவும் தன் நண்பனின் இறப்பு நடந்தது எண்ணி மனம் வேதனை கொண்டது… ஜீவா வேண்டுமானால் அனைவரிடமும் பொய்யாக நட்பு பாராட்டி இருக்கலாம். ஆனால் தேவா சூர்யா, கார்த்தி போன்று தானே ஜீவா, திவேஷ் இருவரையும் எண்ணி உண்மையான அன்பு அவர்கள் மேலும் வைத்திருந்தான்… இப்போது மருத்துவனாய், நண்பனாய் தான் தோற்று போனதாக கருதினான்.. ஜீவா இறப்பு தேவா திட்டமிட்டு செய்யவில்லை தான்.. ஆனால் நடந்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க அவன் தயாராக இருந்தான்.. மகேஸ்வரனிடம் காவல் துறைக்கு தகவல் சொல்ல சொல்லி விட்டு அமர்ந்து இருக்கின்றான்.. விடிந்தால் திருமணத்திற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன… எவ்வளவு ஆசையாக எதிர்நோக்கி காத்து இருந்தான். கடைசியில் இப்படி ஆகி விட்டது.. வெண்ணிலாவை அவளின் பிரிவை நினைக்கையிலே மனம் இன்னும் பாரமானது… அவளுக்கு இது எல்லாம் தெரிந்ததும் தன்னை எண்ணி நிறைய அழுவாள். நிறைய கவலை கொள்வாள்… அதை எண்ணும் போது இன்னும் கவலையாக இருந்தது… ஆனாலும் அவளை சூர்யாவும் தன் குடும்பத்தினரும் நன்றாக பார்த்து கொள்வர்.‌ தான் சிறைக்கு செல்வது தந்தைக்கும் தாய்க்கும் கவலையை அளிக்கும் அவர்கள் வேதனைப்படுவர்.. ஆனாலும் இந்த கடினமான சுழலை கடந்து வர தன் குடும்பமும் நட்பும் காதலியும் தனக்கு துணையாக ஆறுதலாக இருப்பார்கள் என்று நம்பினான்...

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now