விடாமல் துரத்துராளே 23அச்சோ டைம் ஆச்சு என்றபடி தனது பையை தோளில் மாட்டி கொண்டு அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சௌதாமினி…
அம்மா அப்பா நான் காலேஜ் கிளம்புறேன் பாய் என்று கூறவும்.
ஏய் என்னடி இவ்வளோ அவசரம் சாப்பிடமா? ஒழுங்கா இரண்டு இட்லியாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பு என்று தாய் கௌரியும், நீ சாப்பிட்டு வாம்மா நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன் என்று தந்தை செந்திலும் சொல்வார்கள் என்ற சௌதாமினியின் ஆசையும் எதிர்பார்ப்பும் எப்போதும் போல் இன்றும் நடக்கவில்லை…
அவள் கிளம்புகிறேன் என்று சொன்னதும் தந்தை சரி என்று தலை அசைக்க. தாயோ அண்ணண் ஜீவாவின் படத்திற்கு முன்பு அமர்ந்து இருந்தவர் அவள் கூறியதை கூட சரியாக கவனிக்க வில்லை…
இல்லாத ஜீவா மேல் வைத்திருக்கும் அன்பில் கால்வாசி கூட அவர்கள் முன்னே இருக்கும் மகள் மேல் இல்லையே என்று நினைக்கும் போதே சௌதாமினியின் மனம் கலங்கி கண்ணில் நீர் தேங்கியது..
தன்னுடைய அம்மா அப்பாவுக்கு எப்போதும் ஜீவா தான் செல்லப்பிள்ளை. நான் என்றுமே வேண்டாத பிள்ளை என்ற எண்ணம் விவரம் தெரிந்த நாளிலிருந்தே சௌமிக்கு உண்டு… ஜீவாவோ படிப்பில் கெட்டிக்காரன் புத்தி கூர்மை அமைதியான குணம் அவனின் பெற்றோரை பொறுத்தவரை ஜீவா அச்சு வெல்லம் கட்டி தங்கம் தான்.. சௌமி படிப்பில் கொஞ்சம் மந்தம் பத்தாக்குறைக்கு சிறு வயதில் சேட்டையும் அதிகம். அதனாலேயே சௌமி பள்ளி படிக்கும் காலத்தில் நிறைய முறை செந்திலும் கௌரியும் ஆசிரியர் முன்பு போய் நிற்கும் நிலை வரும்… அப்பொழுது வீடு வந்தும் அவர்கள் சௌமியிடம் கூறுவது உன் அண்ணா ஜீவாவால் எங்களுக்கு எப்பவும் பெருமை கௌரவம் தான். அதே உன்னால் எல்லா இடத்திலையும் அசிங்கம் அவமானம் தான்.. ஜீவாவை பார்த்து எப்புடி நல்லா பிள்ளையா இருக்கறதுன்னு கத்துக்க. ஜீவா போல் படி, ஜீவா போல் நட, ஜீவா போல் அதை செய் இதை செய்ய என்று சௌமியை அவளாக இருக்க விடாமல் அனைத்திலும் ஜீவாவை முன்னிறுத்தி

ESTÁS LEYENDO
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...