வீட்டில் அணியும் ஆகாய நீல நிற சுடிதாரில் மதியம் இரண்டு முப்பது மணி போல் கிளம்பி நின்ற மகளைச் சந்தேகமாகப் பார்த்த மஹேஸ்வரி, "உன்ன நாங்க கொடும படுத்துற மாதிரியே காமிச்சுக்கோ. நல்ல டிரஸ் தான் போட்டு போயேன் வைஷு"
"அதெலாம் அந்த வீடு பையன கரெக்ட் பண்ண போறப்ப போட்டுக்குறேன். இந்த ட்ரேஸ்க்கு என்ன மஹேஷு குறைச்சல் இப்ப கூட இத போட்டுட்டு போனா உன் பொண்ணு பின்னாடி நாலு பசங்க சுத்துவாங்க மோய்"
சமையலறையிலிருந்து ஒரு கரண்டி பறந்து வந்து அவள் காலுக்கடியில் விழ, 'ஆத்தி கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டேனோ'
"மா ஷெரூ வந்ததும் கெளம்பிடுவேன் மா" பவ்யமாகப் பேசி சமாளித்தாள். ஷெர்லின், வைஷ்ணவி உற்ற தோழி. பள்ளி முதல் எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
"யாரோ என்ன பத்தி பேசுன மாதிரி இருந்துச்சு" அப்பொழுது தான் உள்ளே வந்தவள் நேராகச் சென்றது சித்தார்த்தின் அறை அருகே தான்.
கதவின் ஓரம் சென்று நின்றவள் உள்ளே தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்த சித்தைப் பார்த்து பின் உதட்டில் சிரிப்புடன் தோழி அருகே வந்தாள்.
தோழியை முறைத்து, "ஏண்டி நீயும் அவனை வார வாரம் பாத்துட்டே தான் இருக்க, பொசுக்குன்னு போய் ப்ரொபோஸ் பண்ணிட வேண்டியது தான?"
படு சீரியஸாக பேசிய தோழியின் முகத்தைப் பார்த்துச் சிரித்த ஷெரூ, "உன் அண்ணனை சும்மா சைட் தான் அடிக்கிறேன், உடனே இளிச்சவாய் ஒருத்தி சிக்கிட்டான்னு அவன தலைல கட்டிவைக்க பிளான் போட்டுட்டியா?"
"இல்ல நீ மாட்டேன்னு சொன்னா எதுத்த வீட்டுல ஒரு பொண்ணு வந்துருக்கு அதுக்கு செட் பண்ணி விடலாம்னு நெனச்சேன். பரவால்ல அவன் வாழ்க்கையும் தப்பிச்சிடுச்சு" தோழியைக் காலை வாரி அவள் முறைப்படியும் பரிசாக வாங்கிக்கொண்டாள்.
"ஆமா இப்ப ஏன் என்ன அவசரமா வர சொன்ன?"
"எதுத்த வீட்டுல போய் சாப்பிட்டு வரலாம் ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க" - வைஷ்ணவி

YOU ARE READING
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...