மாயா என்ன சொல்றிங்க என்றவனிடம் ஆமாம் பிரசாந்த் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு நான் மேரிட் என்றவள் உங்க கிட்ட நான் இப்படி ஒரு அப்ரோச் எக்ஸ்பக்ட் பண்ணவே கிடையாது என்றாள். ஏன் என்கிட்ட சொல்லலை உங்க ரெஸ்யூம்ல சிங்கிள்னு தானே மென்சன் பண்ணி இருந்திங்க என்றவனிடம் பிரசாந்த் உங்க ஆபிஸ்ல மேரேஜ் ஆகாதவங்களுக்கு மட்டும் தான் ஜாப் அதனால தான் என்னோட ரெஸ்யூம்ல சிங்கிள்னு மென்சன் பண்ணி இருந்தேன். உங்க ஆபிஸ்ல மட்டும் இல்லை நெறையா கார்ப்பரேட் கம்பெனில மேரிட் வுமன்ஸ் எங்கே வேலைக்கு எடுக்கிறாங்க என்னோட குடும்ப சூழ்நிலை நான் சிங்கிள்னு பொய் சொல்லி என்றவள் ஐயம் சாரி சார் நீங்க போயி இப்படி என்கிட்ட கேட்பிங்கனு நான் எதிர் பார்க்கலை என்ற மாயா கிளம்பிட பிரசாந்த்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
என்ன இவளுக்கு கல்யாணம் ஆகிருச்சா என்று நினைத்தவனால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. அவள் மீது கோபம் தான் வந்தது. என்னை ஏமாத்தி ஆபிஸ்ல ஒரு வருசம் வேலை பார்த்திருக்காளே என்று நினைத்தவன் இயலாமை , கோபம், வெறுப்பு, ஏமாற்றம் என்று நொந்து போயிருந்தான்.
மாயா நேராக தன் வீட்டிற்கு வந்தாள். மாயா என்னாச்சு என்றவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். என்னாச்சுமா என்றவனது மார்பில் சாய்ந்து அழுதவள் அர்ஜுன் பிரசாந்த் என்று பிரசாந்த் தன்னை காதலிப்பதாக கூறிய விசயத்தை சொல்லவும் இதில் உன்னோட தப்பு என்ன இருக்கு மாயா என்றான் அர்ஜுன். என்ன சொல்ற அர்ஜுன் நான் அவர்கிட்ட முன்னமே நம்மளை பத்தி என்றவளிடம் மாயா சொல்லி இருந்தால் உனக்கு இந்த வேலை கிடைத்திருக்காதே மாயா என்றான்.
சரி விடு மாயா இப்போ என்ன கெட்டுப் போச்சு இந்த வேலை போகப் போகுது அவ்வளவு தானே உன் புருசன் உடம்பில் உயிர் இருக்கிற வரை உன்னையும் , அபிமன்யுவையும் பத்திரமா பார்த்துக்குவேன் என்றான் அர்ஜுன்.
உனக்கு என்னால இன்னும் எவ்வளவு கஷ்டம் தான் வருமோ அர்ஜுன் என்றவள் அழுதிட என்னோட மாயா என்னோட உயிர் அவளுக்காக எப்படிப் பட்ட கஷ்டம் வந்தாலும் நான் தாங்கிக்குவேன் என்றவன் பிரசாந்த் கிட்ட நீ பேசு. நம்மளைப் பத்தி சொல்லு அவர் புரிஞ்சுப்பாரு என்ற அர்ஜுன் இந்த வேலை போனால் பரவாயில்லை மாயா ஆனால் பிரசாந்த் உனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கிறார் அவரோட நல்ல மனசை நாம காயப் படுத்திடக் கூடாது என்றான்.