நம்ம வாழ்க்கையில புதுசா ஒரு இடத்துல போய் நம்ம இருக்கும்போது இல்லன்னா புதுசா ஒரு விஷயத்தை நம்ம செய்யும் போது நம்ம மனசுல ஒரு தயக்கம் இருக்கும்....தப்பா ஆகிடுமோன்ற பயம் இருக்கும்....
இது மாதிரி நானும் பயந்துட்டே தான் ஹைத்ரபாத் போனேன்...
என் பேரு சக்தி பிரியங்கா...இந்த டைரியில் இது என்னுடைய பக்கங்கள்...
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலில ஒரு கிராமத்துல...
என் குடும்பத்துல நான் தான் முதல் முதல்ல காலேஜ்கு போறேன்...என் வீட்டுல எல்லாருமே விவசாயம் தான்....என் வீட்டுல நிலம் சொத்து எல்லாமே இருந்துச்சே தவிர யாரும் படிக்கல...
என் அப்பா அம்மா படிக்கலன்ற காரணத்துனால என்னைய நல்லா படிக்க வச்சாங்க...
திருநெல்வேலில நல்ல ஸ்கூல் பார்த்தாங்க...அங்க தான் ட்வெல்த் வரைக்கும் படிச்சேன்...
என் வீட்டுல என்னதான் படிக்க வச்சாலும் நிறைய கட்டுபாடுகள் உண்டு....
இது என் வீட்டுல மட்டும் இல்ல எல்லாரு வீட்டுலையும் இந்த நிலைமைதான் ....
என் வீட்டுல நான் ஒரே பொண்ணு ..அதுனால என் அப்பா என் மேல நிறைய பாசம் வச்சுருந்தாரு...அதே அளவுக்கு எனக்குன்னு கட்டுப்பாடுகளும் வச்சிருந்தாரு....
வீடு விட்டா ஸ்கூல்...ஸ்கூல் விட்டா வீடு...அனாவசியமா எங்கையும் வீட்ட விட்டு நான் வெளில போக மாட்டேன்...ஸ்கூல் டூர் கூட நான் போனது இல்ல...
இப்புடி என்னைய பாதுகாக்குறதா நினைச்சிட்டு என்னைய வெளி உலகமே தெரியாம வளத்துட்டாங்க...ஸ்கூல் முடிஞ்சிருச்சு காலேஜ் வெளில போய் படிக்குறேன்னு சொன்னேன் ஆனா என்னைய விடல...அப்பா முடியாதுன்னு சொல்லிட்டாரு
காலேஜ் திருநெல்வேலியை சேத்துட்டாங்க...
நானும் வேற வழி இல்லாம போயிட்டேன்...பயோ டெக்னாலஜி எடுத்தேன்...
நம்ம வாழ்க்கையில நம்ம சம்பந்த பட்ட விஷயத்துல நம்ம முடிவெடுக்க முடியாம இருக்குறோம்...
நம்ம யாருக்காக இருக்குறோம் யாருக்காக இந்த வாழ்க்கைய வாழுறோம்னு ஒரு சில தருணங்கள்ல தோணும்...
YOU ARE READING
வானவில்
Romanceவானவில் பார்த்து இருக்கிங்களா ஏழு வண்ணங்கள் இருக்கும்...எல்லா நிறமும் சேர்த்து நம்ம பாக்கும்போது வானவில்லா நம்ம கண்ணுக்கு அழகா தெரியுது.... அது மாதிரி தான் நம்ம வாழ்க்கையும்....சோகம்..சந்தோஷம்..துக்கம்...அழுகை...வெறுப்பு...அன்புனு பல நிலைகளை பல உண...