அத்தியாயம் - 24

1.2K 41 28
                                    


"அண்ணா அண்ணா... அண்ணா" அந்த தளமே அதிருமளவு கத்திக்கொண்டே வந்த யாழினி வேகமாக ஜெயனின் அறைக்குள்ளே சென்றாள். 

அவள் வருவதற்கு முன் அவள் ஓசை அந்த தளத்தையே நிறைத்துவிடும், அவனுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அவனுடைய ஆட்களும் அவளுடைய பேச்சைத் தினமும் கேட்டுப் பழகியிருந்தனர். வழக்கத்தை விடக் குரலில் இன்று அதிகம் குதூகலம். 

"சொல்லு யாழினி... இன்னைக்கு என்ன நடந்துச்சு?" 

இது யாழினியின் வழக்கம், தினமும் காலை வந்து முதல் நாள் வீட்டில் நிகழ்ந்தவை, செல்லும் வழியில் சாலையில் பார்த்தவை, கேட்டவை என ஒவ்வொன்றையும் ஜெயனிடம் மட்டும் அல்ல குறைந்தது இரண்டு மூன்று பேரிடம் பேசி தான் வேலையைத் துவங்குவாள். 

"இன்னைக்கு இல்ல வெள்ளி கிழமை ஆபீஸ்கு நான் லீவு போட்டேன்ல அன்னைக்கு நடந்துச்சு..." 

இன்னும் தலையைத் தூக்காமல் வேலை பார்த்து, "அப்டி என்ன நடந்துச்சு? ஏதாவது சாப்பிட்டியா?" 

"இல்ல அத விட பெருசு ரொம்ப ரொம்ப பெருசு..." சிணுங்கியபடியே, "அண்ணா இங்க என்ன பாருங்க..." 

சிரிப்புடன் தலையைத் தூக்கியவன் தன் முன்னாள் நிற்கும் பெண்ணை பார்த்து பேச்சற்று போனான். எப்பொழுதும் சுடிதார் உடுத்தி வருபவள் இன்று புடவையில். 

"சாளரி வந்துடுச்சு ண்ணா... எவ்ளோ தெரியுமா அம்பதாயிரம் ரூபா" அவ்வளவு சந்தோசம் அவள் குரலில். 

"சந்தோசம் யாழினி... இன்னைக்கும் வர மாட்டேன்னு சொன்ன இப்டி திடீர்னு வந்து நிக்கிற?" 

"சாளரி வந்துச்சுல அது தான் உங்களுக்கு டிரீட் வச்சிட்டு போகலா..." 

"ஜெயன் இங்க வாங்க..." 

உதய்யின் குரல் கேட்டு விழி அகல விரித்தவள் பேச வந்ததை மறந்து ஜெயனிடம், "அண்ணா அவங்க வந்துட்டாங்களா?" 

ஆசையாய் கண்கள் மிளிர கேட்க ஜெயன் சிரிப்போடு ஆமாம் என்றான். உதய் ஒரு முக்கியமான வேலை சார்ந்து ஜப்பான் சென்று நேற்றோடு எட்டு நாட்கள் ஆகியிருந்தது, அவனைக் காணாமல் வாடிக்கிடந்தவள் காதுகளுக்குத் தேனாய் வந்தது அவன் குரல். 

இணையா துருவங்கள் (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora