விடாமல் துரத்துராளே 28

2.8K 81 34
                                    


விடாமல் துரத்துராளே 28

மறுநாள் காலை தேவா தியாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது… தேவா போலீஸ் ஸ்டேஷனில் பேசிய வீடியோ சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்தது... அதை அறிந்த மகேஸ்வரனுக்கு அதீத மகிழ்ச்சி உண்டானது… தேவாவின் வாழ்வு இப்புடி மாறியதில் அதுவும் தன்னால் தடம் மாறியதில் இன்று வரை குற்ற உணர்வில் உழன்றவருக்கு இப்போது அது கொஞ்சம் குறைந்தது போன்று இருந்தது… இனி தேவா வாழ்க்கையும் இயல்பாக அனைவரை போன்றும் குடும்பம் குழந்தை என்று அவன் வாழ்வு சிறப்பாக அமையும்… தேவா மகிழ்ச்சியாக இருப்பான் என்பதை எண்ணி அவர் மகிழ்ந்தார்…

அதற்கு நேர் எதிராக அதீத கோவத்தில் இருந்தார் ஜீவாவின் தந்தை செந்தில்… தேவா தியா திருமணம் விஷயம் அறிந்ததும் எப்போதும் போல் ஜீவாவின் அன்னை கௌரி " என் பையனும் உயிரோட இருந்திருந்தா அவனும் இந்நேரம் இப்புடி கல்யாணம் பண்ணி சந்தோஷமான வாழ்ந்து இருப்பான்ல, எல்லாத்தையும் ஒன்னுமில்லாமா பண்ண அவனுக்கு மட்டும் எல்லாமே நல்லதா நடக்குதே, கடவுளே உனக்கு கண் இல்லையா, இப்புடி அவனை உயிரோட விட்டு வச்சு இருக்கியே" என்று தேவாவிற்கு வழக்கம் போல சாபங்களை அள்ளி தெளித்து விட்டு எப்போதும் போல் ஜீவா படத்தின் முன்பு அமர்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்…

மகனின் இழப்பு, மனைவியின் கண்ணீர் இரண்டையும் பார்க்கையில் செந்திலுக்கு தேவா மீது தான் இன்னும் இன்னும் கொலைவெறி உண்டானது… தாங்கள் மகனை இழந்து ஒவ்வொரு நாளையும் நகர்த்த முடியாமல் துன்பத்தில் வாடும் போது அவன் மட்டும் காதல், கல்யாணம் என்று சந்தோஷமாக இருப்பதா, தானே நேரிடையாக தேவாவை ஏதாவது செய்து விடலாம் என்று கூட யோசனை தோன்றியது… ஆனால் சற்று நேரத்திலே திவேஷ் அன்று கூறியது நினைவு வந்தது.. தேவா மறுபடியும் சந்தோஷமா இருக்கனும்… அப்புடி அவன் மகிழ்வின் உச்சியில் இருக்கும் போது அவனை கீழே தள்ளி விட வேண்டும்… அதன் பிறகு தேவாவே தன்னை அழித்துக் கொள்வான்... அதுவரை அமைதியாக இருங்க என்று கூறியது நினைவு வந்தது.. மறுபடியும் தன் மொபைலை எடுத்து தேவா தியா திருமண வீடியோவை ப்ளே செய்து பார்த்தார்… அதில் இருக்கும் தியாவை பார்த்து ஓ…. தேவாவோட சந்தோஷம்ன்னு திவேஷ் சொன்னது இந்த பொண்ணை தானா, பார்த்துக்கலாம் இந்த சந்தோஷத்தை கொஞ்ச நாள் கழிச்சு அந்த தேவா வாழ்க்கையில் இருந்து அழிச்சு காட்டுறேன்… பிடிச்சவங்களோட இழப்பு எப்புடி இருக்கும்னு அந்த தேவாவிற்கு காட்டுறேன் என்று தியாவை பார்த்தபடி வன்மத்துடன் மனதில் நினைத்துக் கொண்டார்…

விடாமல் துரத்துராளே!!Où les histoires vivent. Découvrez maintenant