" சின்டெரல்லா" என்றொரு உலக புகழ் பெற்ற நகரம். அந்த நகரத்தில் அருண், வருண், தருண் என்று மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த மூவரில் ஒருவர் அரசியல்வாதி, மற்றொருவர் சினிமா திரைப்பட இயக்குநர், இன்னொருவர் சினிமா நடிகர்.
அந்த அரசியல்வாதியானவர் தனக்கு அரசியல் மூலம் கிடைக்கும் பல கோடிகளை சினிமா திரைப்படம் தயாரிப்பதில் செலவழித்தார். அதற்கு தனது நண்பனான வருணையும், தருணையும் இயக்குநராகவும் நடிகராகவும் பயன்படுத்திக்கொண்டார்.
இவர்களது கூட்டணி பல வருடங்கள் தொடர்ந்தது.
அருண் ஒரு நாள் வெளிநாடு செல்ல முடிவெடுத்தார். அந்த சுற்றுப்பயணத்திற்கு அவருக்கு சில கோடிகள் தேவைப்பட்டது. அவர் தனது கணக்காளரை ( accountant) அழைத்து வினவியபோது அவரது வங்கிக்கணக்கில் பணம் 💰 ஏதும் இல்லை என்பதை அறிந்து கொண்டார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அந்த அரசியல்வாதி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவிக்கும் திரைப்படங்களை தயாரித்ததால் அவரால் போதுமான வெற்றியை 🏆 ✌️ பெறமுடியவில்லை என்ற உண்மை தெரியவந்தது.
உடனே அவர் தனது நண்பர்களான வருண் மற்றும் தருணின் உதவியை நாடினார். அப்போது தான் அவருக்கு தெரியவந்தது *வருண்* தனது பணம் 💰 அனைத்தையும் குதிரை 🐴 பந்தயத்தில் இழந்துவிட்டதாகவும் , மேலும் நடிகரான * தருண்* சூதாட்டத்தில் நாட்டம் கொண்டிருந்த்தால் தனது பணம் 💰 முழுவதையும் அதில் இழந்துவிட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தார்.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் * அருண்* என்ற அந்த அரசியல்வாதி தனது நண்பர்களுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார்.
நீதி :
அறனீனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.