"ஆதவா..."
பேச வந்த உதய்யை நிறுத்தினான், "சொல்லாதடா என் பேர" விஷத்தை நாவில் தடவி ஆதவன் பேச அவனை அடக்க வந்தான் தமிழ்.
"ஆதவா பொறுமையா இரு... நீ பேசுறது செய்றது எதுவுமே சரியில்ல"
"சரியில்லாமயே இருந்துட்டு போகட்டும். இவன மாதிரி மனுஷ மிருகங்ககிட்ட எல்லாம் இப்டி தான் கைல பேசணும்" - ஆதவன்
ஆதவன் பற்றியிருந்த உதய்யின் சட்டையை விட்டு பிரித்த கெளதம், "என்னடா ரொம்ப தான் பண்ற.. நானும் வந்ததுலயிருந்து பாக்குறேன் பைத்தியம் மாதிரி நடந்துக்குற" ஆதவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டான் கெளதம்.
ஒரு அடி பின்னால் சென்ற ஆதவனின் கால்கள் தடுமாற உதய்யின் கைகள் தன்னிச்சையாக அவனை பிடிக்க செல்ல அதற்குள் தானே சுதாரித்த ஆதவன் கால் ஊன்றி நின்றுகொண்டான்.
உதய் பக்கம் வந்து நின்ற ஆதவன் தந்தை அவன் தோள் பற்றி, "என்ன ஆச்சு உதய்? ஏன் இவன் உன் மேலயே கோவமா இருக்கான்?" என்றார் அவன் சட்டையை சரி செய்து.
உதய் மீது ஆதவனின் தந்தைக்கு அவ்வளவு மரியாதை உண்டு, தொழில்ரீதியான முறையில் மட்டுமல்ல. தன்னை கொலை செய்யவும் துணிந்து நிற்கும் நண்பன் அந்நியமாகிப்போனான் உதய்க்கு, "தெரியல அங்கிள் காதல் கண்ண மறச்சிடுச்சு போல"
உதய்யின் வார்த்தையில் இன்னும் கோவம் வர, "ஆமா டா.. மறச்சிடுச்சு. உன் கண்ண எப்படி பழி மறச்சிடுச்சோ அதே மாதிரி பதினஞ்சு வருஷம் லவ் என்னோட கண்ண மறச்சிடுச்சு"
சீறி அந்த வளாகமே அதிரும் வகையில் கத்தினான். அப்பொழுதும் பொறுமையாக நின்ற உதய் ஆதவன் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டு, "ஆதவா பொறுமையா இரு. யோசிச்சு பேசுற நிலமைல நீ இல்ல"
அவன் கையை தட்டிவிட்ட ஆதவன், "நான் நல்லா நிதானமா தெளிவா தான் இருக்கேன்" தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து உதய்யின் முன் எறிந்தான்.

YOU ARE READING
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...