"உதயாாா..." உதய்யின் உடலை கைகளில் அள்ளி மடியில் கிடத்தி முதலில் அவன் மூச்சை தான் பார்த்தான்... அந்த நொடி வரை சீராக தான் இருந்தது. உதய்யின் மூச்சை தெரிந்துகொண்ட பிறகு தான் ஆதிக்கு மூச்சு விட முடிந்தது.
சுற்றிலும் கண்களை சுழலவிட்டு பார்த்தான் எங்கும் கும் இருட்டு ஆனால் சலசலக்கும் மனிதர்கள் காலடி சத்தம் சத்தம் தெளிவாக கேட்டது. நிச்சயம் உதய்யையும் தன்னையும் வெளியில் விட மாட்டார்கள் என்று தெரிந்தது. வெறியை கண்களிலே அடக்கியவன் எழுந்து சென்று வாகனத்தை உயிர்ப்பித்து ஆக்சிலரேட்டரை அந்த இடமே அதிரும் வகையில் முறுக்கி விட்டான்.
"வா***தா டேய் ஆம்பளையா இருந்தா வெளிய வாங்கடா..." வாகனத்தின் சத்தத்தை விட அதிக உருமாளாய் வந்தது ஆதியின் ஆத்திர குரல். அகங்காரத்தை தட்டிவிட வந்தனர் நான்கு மனிதர்கள்... வீச்சருவாலும், கூரிய கத்திகளோடும்.
"யார்ரா நீயி? அவனை மட்டும் தான் போட சொல்லி ஆடர். சம்மந்தமே இல்லாம வந்து ஆஜராகி சீன் ஆகிடாத... ராஜா நடுல எவன் வந்தாலும் போட்டு தள்ளு. இவனோட பாடிய"
அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வெள்ளி காப்பை முறுக்கிவிட்டு குனிந்து வேகமாக கைக்குட்டை பிடித்து சைலன்சரை வண்டியிலிருந்து அவிழ்தவன் ஆணையிட்டுக்கொண்டிருந்தவன் முகத்தோடு சூடாக இருந்த சைலன்சரை வைத்தே ஓங்கி அடிக்க முகத்தை பிடித்து துடித்து கீழே விழுந்தான்.
"அண்ணாத்த..." இருவர் அவனை பார்த்து ஓட ஆதியோ வெறி ஏறியது போல் மீண்டும் அவன் முன் வந்து நெஞ்சிலே காலை மிதித்து,
"நைனா இப்ப என்ன சொன்ன நீ... மறுபடியும் சொல்லு... சரியா கேக்கல காதை காட்டி ஆதி கேலி செய்ய அந்த இடைவேளையில் ஆதியின் கையில் ஒருவன் அரிவாள் கொண்டு ஆழமாக கையை கீறிவிட்டிருந்தான்.
வலியை பொறுக்க முடியாமல் ஒரு நொடி அதிர்ந்த ஆதி அடுத்த நொடி, அதே சூடான சைலன்சர் கொண்டு அவனின் காலிலே அழுத்தமாக சூடு வைத்து அவன் கழுத்தோடு ஓங்கி அடி வைத்தான்.

YOU ARE READING
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...