சிறைச்சாலையை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரன் முகம் எதையோ சாதித்த உணர்வில் திளைத்திருந்தது. தன்னுடைய பி.எ-வை பார்த்தவர் கை காட்டி வாகனத்தைத் திருப்பி வரக் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஜம்பமாக ஏறி முன்னிருக்கையில் அமர்ந்தார்.
வாகனம் மெதுவாகச் செல்ல, "ஏன்யா அவன் எவ்ளோ பெரிய ஆளு, மயிறு, மட்டுனு அந்த சீன் குடுத்த நீ? இப்போ என்னையா ஒரே பிளான்ல பொட்டுனு போய்ட்டான்" ஏளனமாகச் சிரித்தவர் அவன் தோளில் விளையாட்டாக அடித்தார்.
'தரித்திரியம் புடிச்சவனே நீ சாகுறதும் இல்லாம என்னையும் கூடயே சேந்து குழில தள்ளு. மூடிட்டு வாடா' மனதில் தான் நினைக்க முடிந்தது பி.எ-வால். வாயை விட்டு ஏதாவது பேசினால் இந்த கிழவனிடம் யார் அடி வாங்குவது. சிரித்துச் சமாளித்தான் அவன்.
"ம்ம்ம் அப்றம் என்ன சரியா மூணாவது நாள் என்ன வெளிய எடுத்திருக்க... குடும்பமே ஒரே கூப்பாடு போட்ருப்பானுகளே... பாக்க கண் கோடி வேணும். கருமாதி இன்னைக்கா?"
"சார்..." ஈஸ்வரனுக்குப் பதில் கூற முடியாமல் அமைதியாய் இழுத்தான் அவன் பி.எ.
"சும்மா சொல்லுயா... எதுக்கு இந்த பதட்டம்? என் மாமன் எப்டியும் இன்னும் நொந்து மூலைல போய் சுருண்டுருவான். அவன் தம்பிய ரெண்டு தட்டு தட்டிவிட்டா அடக்கிடலாம். என் மாப்பிள்ளை நான் 'ம்ம்' சொன்னா யோசிக்காம அப்டியே செஞ்சிடுவான்.
ஹரியை விட்டு தள்ளு, ஆதவன் உதய் இல்லனா வர மாட்டான். அந்த ஆதியைத் தான் என்ன பண்ணாலும் கொஞ்சம் கஷ்டம் பரவால்ல, கைய கால ஒடச்சு போட்டுடலாம்"
அத்தனையையும் இந்த மூன்று நாட்களில் யோசித்து வைத்தவர் போல் மனதிலிருந்த திட்டத்தை எல்லாம் வெளியில் உடைத்தார். வலது காதின் அருகே ஏதோ உரச, தன்னுடைய காதை துடைத்து அமைதியாய் இருக்க மீண்டும் அந்த காதில் உரசியது ஏதோ ஒன்று,
"தோ இங்க தான் இருக்கு ஒடச்சு காட்டு பாப்போம்" திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பி ஈஸ்வரன் பார்க்க இன்னும் இன்னும் அதிர்ச்சி.

ESTÁS LEYENDO
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...