மதியம் உணவு அண்ணன் வந்ததன் பிரதிபலிப்பாக அமர்க்களமாய் நடத்தியிருந்தார் மஹாலக்ஷ்மி. மொத்த குடும்பமும் வயிற் நிறைய உண்டு நிம்மதியாக வீடு திரும்பியிருக்க மதியம் அனைவருக்கும் நல்ல உறக்கம். அதே நேரம் சகோதரன் பார்வை தன் மீது ஒரு கேள்வியோடு தொடர்ந்துகொண்டே இருப்பதை கண்டும் காணாமலும் தவிர்த்த மகாலட்சுமிக்கு தான் உறக்கம் எட்டாக்கனியாக போனது.
இனி மொத்தமும் மகனின் கையில் என்று எண்ணியவர் மாலை மணி ஆரை தொட்டதும் அனைவருக்கும் மத்திய சிற்றுண்டியாய் வெளியில் தூரிய தூறலுக்கு இதமாக பஜ்ஜி செய்து உடன் காபி, டீ என கொடுத்து இறுதியாக மகனுக்கு தேவையானதை எடுத்து அவன் கீழே வரும் முன் மாடிக்கு விரைந்தார்.
சரியாக இவர் மாடிக்கு செல்லும் பொழுது தான் கீழே வர ஆயத்தமானவன் டீ-ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்த சமயம் அன்னையை பார்த்து சிரிப்போடு, "ஒரு கால் பண்ணிருந்தா நானே கீழ வந்துருப்பேனே ம்மா"
கோவம் தீர்ந்ததோ என்ற ஆசையில் அவன் பேச அன்னை முகம் இப்பொழுதும் வாடி தான் கிடந்தது. அவரின் கை பிடித்து அவன் அறையில் வாயிலில் அமர வைத்தவன் அவர் அருகில் அமர்ந்து, "ரொம்ப கோவமா?" என்றான் வருத்தத்துடன்.
தனயன் முகம் பார்த்தவர் அவன் முகத்தில் இருந்த சோர்வை கண்டு, "ரொம்ப இல்ல. ஆனா இருக்கு. உனக்கு என்ன ப்பா அங்க போகணும்னு அவசியம்? ஆறு மாசம் அப்பா உன்ன பாத்துக்கமாட்டாரா? அது என்ன ப்பா பசங்க கொஞ்சம் வளந்ததும் பெத்தவங்ககிட்ட காசு கேக்கவே இவ்ளோ ஈகோ பாக்குறீங்க?"
"அப்டிலாம் இல்ல ம்மா" என்றவன் குரலே உள்ளே சென்றிருந்தது.
"நீங்க நல்ல நிலைமைக்கு வரணும்னு தான் ப்பா உங்க மனசு அலைப்பாயிர வயசுல பெத்தவங்க நாலு வார்த்தை பேசுவோம் அத மனசுலையே வச்சுட்டு இவ்ளோ தூரம் வளந்ததும் இப்டி ஒட்டியும் ஒட்டாம இருந்தா அப்பா-கு மனசு எவ்ளோ கஷ்டப்படும் யோசிச்சு பாத்தியா கார்த்தி?" மகனிடம் எந்த மாற்றமும் இல்லை.

YOU ARE READING
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...