வீட்டின் அருகே உள்ள சிவன் கோவிலில் தான் மகாலட்சுமியும், வைஷ்ணவியும் அமர்ந்திருந்தனர். வந்து சில நிமிடங்கள் ஆகியது. அமைதியாக இருளை வெறித்து அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கு ஏதோ மனம் பாரமாக இருக்கும் உணர்வு.
உடன் வந்த வைஷ்ணவி பிரதோஷத்தினை முன்னிட்டு கொடுத்த சுண்டலையும், தயிர் சாதத்தையும் இரண்டு கைகளில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றி பெற்று வந்த வீராங்கனை போல் கர்வத்துடன் மகாலட்சுமிக்கு அருகில் அமர்ந்து அவர் கையில் ஒரு தொன்னையை திணித்து,
"நீங்க சாப்பிடுங்க உங்க பையனுக்கு குடுக்க வேணாம்" என்றவள் குரலில் ஒரு செல்ல கோவம் இருந்தது.
தான் என்ன பேசினாலும் சிரிக்கும் மஹாலக்ஷ்மி இன்று எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்க, "என்ன ஆச்சு த்தை..." அவர் கையை குலுக்கி கேட்டாள்.
மௌனமாக ஒரு கவரை கொடுத்தவர், "கார்த்திக்கு விசா வந்துடுச்சு"
"போடு சக்க... எப்போ வரும்னு எதிர்பாத்துட்டே இருந்தேன்"
அவருடைய மனநிலைக்கு மாறாக வைஷ்ணவி துள்ளலுடன், "சாமிகிட்ட வச்சு வாங்குனீங்களா?"
வைஷ்ணவியை முறைத்தவர், "வைஷு," மனமே இல்லாமல் இருந்தவரின் உணர்வை புரிந்தவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று இறைவன் காலடியில் வைத்து மன நிறைவுடன் மீண்டும் மஹாலக்ஷ்மி கையில் கொடுத்தாள்.
"இந்தா பாருங்க மாமியாரே... முதல் தடவ வெளிநாடு கெளம்புறாங்க. மூஞ்சிய தூக்கி வச்சேன், முகரைய தூக்கி வைப்பேன்னு பிடிவாதம் பிடிச்சீங்க அப்றம் நமக்குள்ள சண்டை தான் வரும்"
"நீ என்ன அவன் என்ன பண்ணாலும் சரினு வந்து நிக்கிற?" - மஹாலக்ஷ்மி
"அவர் என்ன தப்பு பண்ணார்னு நான் அவருக்கு எதிரா நிக்க சொல்றிங்க?" மஹாலக்ஷ்மியின் மௌனம் அவளை மேலும் தொடர வைத்தது.
"உங்க விருப்பபடி தானே மதுரைல தான் இருந்த நல்ல வேலைய விட்டுட்டு இங்க வந்து வேற வேலை பாக்க நினைக்கிறார்? அப்போ ஒரு ஆறு மாசம் அவரோட சந்தோஷத்துக்காக வெளிய அனுப்பி வந்ததுல என்ன கொறஞ்சு போய்ட போகுது? என்னமோ ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க"

VOCÊ ESTÁ LENDO
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...