டிங் டாங் - 18

562 33 6
                                    


"யாருங்க நீங்க என் விசயத்துல தலையிட?"

நண்பன் ஒருவன் மூலம் தன்னுடைய பிரச்னையை தேடி கண்டுகொண்டவன் முதலில் அன்னைக்கு அழைத்து ஏன் தன்னிடம் இந்த பிரச்னையை பற்றி கூறவில்லை என்று கடிந்துகொண்ட பொழுது வாய் தவறி வைஷ்ணவி தான் அவனிடம் கூற வேண்டாம் என்று வற்புறுத்தியதை சொல்லிவிட, அன்னையிடம் அணைப்பை துண்டித்து சில நிமிடங்கள் பிறகு குறையாத கோபத்துடன் வைஷ்ணவிக்கு அழைத்துவிட்டான்.

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, 

"அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. 

"உங்க கோவம் எனக்கு புரியுது கார்த்... புரியுது" 

"இல்லங்க உங்களுக்கு ஒன்னும் புரியல. அது என்னோட பிரச்சனை. என்னோட கஷ்டம். அது எனக்கே தெரியாம வைக்கணும்னு நீங்க யோசிக்கிறது எந்த வித்ததுலங்க நியாயம்?" - கார்த்தி 

"நான் அந்த அர்த்தத்துல சொல்லல..." 

வைஷ்ணவியை பேசவே விடவில்லை அவன், "எந்த அர்த்தத்துல சொன்னாலும் நான் புரிஞ்சிகிட்ட ஒரே அர்த்தம் உங்களோட டாமினன்ஸ் தான். என் வீட்டு ஆளுங்க வர நீங்க ரொம்ப டாமினேட் பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அது சுத்தமா புடிக்கல. உங்களோட விளையாட்டு தனத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கெடைச்சதா? ரிசார்ட் என்னோட பல வருஷ கனவு. அது உங்களால வீணாபோறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது" குரல் சீராக இருந்தாலும் அவன் பேசிய விதம் அவனுடைய கோவத்தை திரையிட்டு காட்டியது. 

"வீணாபோகுற அளவா நான் எதுவும் பண்ணிட்டேன்?" அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் துளி ஒன்று அவள் கன்னத்தை நீண்டு தரையில் சிதறியது. 

"ஆமா... உங்களால இப்போ ஒருத்தன் பார்ட்னர்ஷிப்ல இருந்து போறேன்னு சொல்றான். என் மேல நம்பிக்கை போச்சு அவங்களுக்கு நான் எதுவும் பேசாததால. அதுவே சொல்லலையா உங்களோட அதிகபிரசங்கி வேலைய?" நிச்சயம் வைஷ்ணவி இந்த வீரியத்தை எதிர்பார்க்கவில்லை. 

டிங் டாங் காதல்Onde histórias criam vida. Descubra agora