வைஷ்ணவி - கார்த்தி திருமணம் முடிந்து இன்றோடு ஐந்து மாத காலம் முடிந்தது. இருவரும் குற்றாலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறியிருந்தனர்.திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் இருவரையும் இங்கு அழைத்துவந்து பால் காய்ச்சி அவர்களுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி அடுக்கிவிட்டார் வைஷ்ணவி தந்தை. கார்த்தி எவ்வளவோ மறுத்தும், தந்தையானவர் கேட்டபாடில்லை. நினைத்ததை செய்து முடித்தே நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார்.
வைஷ்ணவி, கார்த்திக்கு அந்த வீடு சொர்கமானது அந்த ஐந்து மாதத்தில். கீழ் வீட்டில் வயதான தம்பதி இருக்க, மேல் மாடியில் சிறிய அளவான வரவேற்பறை, ஒரு படுக்கையறை, ஒரு குளியலறை, ஒரு சமையலறை இருக்க, அந்த வீட்டின் அளவை விட பெரிதாக மாடி மொத்தமும் காலியாக இருந்தது.
மனைவி ஆசைப்பட்டு கேட்க, இரண்டுபேர் அமரக்கூடிய வகையில் ஊஞ்சல் ஒன்றை வாங்கி போட்டு அதை சுற்றி திரைசீலை போலே ஷெட் ஒன்றையும் போட்டுவிட்டான்.
அங்கு அமர்ந்தபடியே தூரத்தில் சிறு ஓடை போல் தெரிந்த குற்றால அருவியை தினம் பார்த்து ரசிக்கும் வைஷ்ணவிக்கு தான் மகிழ்ச்சியில் மொத்தமும் மறந்து போகும். பல நாட்கள் கணவனையும் மறந்து இயற்கையோடு ஒன்றிவிடுவாள் பாட்டை போட்டுவிட்டு.
ரிசார்ட் வியாபாரம் நன்றாக செல்ல, ஸ்விக்கி, ஸ்ஜோமோட்டோ என வியாபாரம் நன்றாக சூடு பிடித்தது. குடும்பமாக வந்து தங்க ஸ்விம்மிங் பூல், சிறுவர்கள் பூங்கா என குடும்பமாக அதிகம் வந்து செல்ல துவங்கினர்.
பொழுது போகாத நேரம் கார்த்தியின் ரிசார்ட் சென்று அங்கு சமயலறைக்குள் சென்று அங்கிருப்பவர்களை கேலி செய்து கிண்டல் செய்து, சமையல் கத்து தருமாறு தொந்தரவு செய்து என ஒரு போரையே உருவாக்கிவிடுவாள்.
கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் வெளியில் இருக்கும் கார்த்தி, கூட்டம் அதிகம் வந்தால் கிச்சனுள் சென்றுவிடுவான். அதனால் அவளும் கார்த்தி அங்கு இல்லாத நேரம் தான் அங்கிருக்கும் கார்த்தியின் ஜூனியர்களை தொந்தரவு செய்வாள்.

STAI LEGGENDO
டிங் டாங் காதல்
Storie d'amore"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...