விடாமல் துரத்துராளே 40
மறு நாள் ஹரிணி தன் அறையில் அமர்ந்து எதையோ படித்து கொண்டு இருந்தாள்.. அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்க எழுந்து போய் திறக்க,
அடுத்த செகண்ட் விழிகள் அதிர்ச்சியில் கோழி முட்டை சைஸ் விரிந்தது..கதவை திறந்த மாத்திரத்தில் உள்ள வந்த ஹர்ஷா அவளின் இடுப்பை வளைத்து அன்று பாதியில் விட்ட முத்தத்தை தொடர ஆரம்பித்தான்.. இவன் எப்புடி இங்க என்ற அதிர்ச்சியில் அவளுக்கு மூளையே வேலை செய்ய மறுத்தது...
ஹர்ஷாவோ நிறுத்தி நிதானமாக இதழை சுவைத்து முடித்து அவள் மூச்சு விட சிரமப்படும் போது அவளை விட்டவன், அவளை அணைத்தப்படியே இன்னும் அதிர்ச்சி விலகாமல் நின்றவளை தன் முகம் பார்க்க செய்தவன்,
அன்னைக்கு சொன்னியே ஒரு வார்த்தை நான் உன்னை அப்புடி நினைச்சு தொடுறது இல்லை.. உன்னை நான் என் லவ்வரா வொய்ஃப்பா நினைச்சு தான் தொடுறேன். அதை நான் உணர்ந்ததே நீ என்னை அடிச்சிட்டு போன அப்புறம் தான்… இந்த மாதிரி உன்கிட்ட நடந்ததுக்க எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கு, எனக்கு மட்டும் தான் இருக்கு, உன்னை நெருங்க எனக்கு யாரோட பர்மிசனும் தேவையில்லை உன் பர்மிசன் உள்பட என்றவன் சிலையாக நின்றிருந்தவளின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு வெளியேறினான்…
அவன் செய்த செயல் பேசிய வார்த்தைகள் புத்திக்கு உரைக்கவே சில நொடி பிடித்தது… அச்சோ என்று தலையில் அடித்த ஹரிணி பயத்துடன் பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.. ஏனெனில் தியாவும் அவளுடன் அந்த அறையில் இருந்தாள்.. நடந்தது அனைத்தையும் அவள் பார்த்து இருப்பாளே என்ன நினைப்பாளோ என்ற பயம்.. ஹரிணி நினைத்தது போலவே தியா பயங்கர கோவத்துடன் ஹரிணியை முறைத்து கொண்டு இருந்தாள்..
தியாமா நான் உன்கிட்ட ஹரிணி விளக்கம் கொடுக்க ஆரம்பிப்பதற்குள் தியா தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கோவமாக அறையை விட்டு வெளியேறினாள்…

KAMU SEDANG MEMBACA
விடாமல் துரத்துராளே!!
Romansaதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...