விடாமல் துரத்துராளே 41ஹம்… அப்பாடா ஒரு வழியா எல்லாம் முடிஞ்சது என்றபடி தன் இரு கைகளையும் தட்டியவள் இரண்டு கைகளையும் இடுப்பின் மீது வைத்து அந்த அறையை சுற்றி பார்த்தாள் தியா..
அந்த அறையின் ஷீலிங்கிலும் சுவர்களிலும் வண்ண வண்ண பலூன்கள் ஊத்தப்பட்டு கலர் கலரான பூக்கள் ஒட்ட வைக்கப்பட்டு இருந்தன.. கலர் கலரான வண்ண பேப்பர்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தன.. தரை முழுவதும் சிவப்பு நிற ஹாப்பி பர்த்டே என்று எழுதப்பட்டு இருந்த ஹார்ட்டின் பலூன்கள் நிரம்பி இருந்தது.. அந்த அறையின் மத்தியில் வட்ட வடிவிலான மேசை ஒன்று இருந்தது.. அதன் மீதும் நீலமும் வெள்ளையும் கலந்த வெல்வெட் துணி போடப்பட்டு இருந்தது..
அட அட அட தியா கலக்கீட்டடி டெக்கரேசன் செமையா இருக்கே, உனக்குள்ள நிறைய திறமை உனக்கே தெரியாம ஒளிஞ்சு இருக்குடி.. நீ வேற லெவல்டி தியா என்று தன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு கொண்டு தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்தவள் மீண்டும் ஒரு தரம் அந்த அறையை சுற்றி பார்த்தாள்..
அச்சோ இதை மறந்துட்டேனே என்று தன் நெற்றியில் தட்டி கொண்டவள் அங்கிருந்த கவர் ஒன்றில் இருந்து அங்கிருந்த சுவர்களில் ஹாப்பி பர்த் டே பாப்பா என்று ஆங்கில எழுத்தில் வெட்டப்பட்டு அதன் மீது பிங்க் நிறத்தில் ஜீகினா ஒட்டி இருந்த தர்ம கோலை அந்த வட்ட மேசையின் பின்புறத்தில் ஒட்டி நடுவில் அவளின் போட்டோ ஒன்றையும் ஒட்டி விட்டு இப்ப தான் பக்கவா இருக்கு என்றவள்,
இந்த ரூம்ல இதோ இந்த இடத்தில்ல கேமராவ ஆன் பண்ணி செல்போனை வச்சிடனும்.. பாவா வீட்டிக்கு வந்ததும் அவரை எப்புடியாவது சம்மத்திக்க வச்சு என் கண்ணை பொத்தி இங்க கூட்டிட்டு வர சொல்லனும் கேக் வெட்டனும் அவர் முகத்தில்ல நான் பூசி என் முகத்தில்ல அவர் பூசி அப்புறம் இந்த கிஃப்ட்டை என் கையில்ல கொடுக்க வைக்கனும்.. அவ்ளோ தான் இதை எல்லாம் வீடியோ எடுத்து ஷோஷியல் மீடியாவில்ல போட்டு பார்க்கிறவங்க வாய் அடைச்சு போக வைக்கனும்.. என் பாவா என்னை ஹாப்பியா வச்சே இருக்காங்கன்னு நினைக்கனும்… அதுவும் அந்த பாலகிருஷ்ணனும் யமுனாவும் அன்னைக்கு எவ்ளோ பேச்சு பேசுனாங்க… அவங்க இதை எல்லாம் பார்த்துட்டு கடுப்பு ஆகனும் என்றவள் பெருமூச்சு ஒன்றை விட்டு,

YOU ARE READING
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...