தளபதி KASPERSKY

18 2 3
                                    

அமைதியும் , வளமும் மிக்க தன் நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான் அரசன் ஒருவன்... சிறிது காலம் அனைத்தும் நல்லபடியாக சென்று கொண்டிருக்க...... மகிழ்ச்சியுடன் ஆண்டு வந்த அரசனுக்கு நாட்டில் ஒரு சில பகுதிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வர அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அரசன் தன் ஆட்சியை செம்மையாக தொடர்ந்து வந்தான் ..... சிறிது காலம் கடந்தது...

அரசனை காண வந்த தலைமை ஒற்றர்கள் நாட்டில் தீய சக்திகள் புகுந்துள்ளதாகவும் அவர்கள் மூலம் நாட்டின் பல இடங்களில் பிரச்சனை வெடித்துள்ளதாகவும் கூற.... இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் அரசன்.... அதுவரை தனது நாட்டிற்கு என தனி படைகள் ஏதும் வைத்திருக்காத அரசன்..... ஒரு தளபதியை நியமித்து அவனுக்கு கீழ் ஒரு பாதுகாப்பு படையை அமைத்தான்....

தனது படைக்கு முதல் பணியாக நாட்டில் உள்ள தீய சக்திகளை களை எடுக்க உத்தரவிட்டான்..... பணியை ஏற்ற தளபதி தனது படையுடன் இணைந்து வெற்றிகரமாக அனைத்து தீய சக்திகளையும் அழித்துவிட்டு அரசன் முன் வந்து நின்றான்... அவனை பாராட்டிய அரசன் பின் அவனது படைகளுடன் நாட்டின் எல்லைக்கு சென்று அங்கு கேடயமாக இருந்து நாட்டிற்குள் தீய சக்திகள் புகாமல் பாதுகாக்குமாறு உத்தரவிட்டான்.... உத்தரவை ஏற்ற தளபதி தனது படைகளுடன் நாட்டின் எல்லையை அடைந்து தனது பணியை தொடர்ந்தான்....

காலங்கள் ஓடின தளபதியின் பாதுகாப்பில் நாடு அமைதியும், வளமும் குலையாது இருந்தது...  இவ்வாறு இருக்க நாட்டினை கொடும் அரசன் ஒருவன் தாக்க முயற்சித்து கொண்டிருந்தான்......தளபதியின் படையில் இருந்த வீரர்கள் நீண்ட நாட்கள் பணிபுரிந்ததன் விளைவாக மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.... எனவே இவர்களை கொண்டு அவனை சமாளிப்பது மிகவும் கடினம் என உணர்ந்த தளபதி இங்கு உள்ள படை வீரர்கள மிகவும் சோர்வடைந்து விட்டனர் இன்னும் ஐந்து நாட்களில் நாடு திரும்புவதாக கூறுகின்றனர் அதனால் அதற்குள் புதிய படைகளை அனுப்புமாறு அரசனுக்கு செய்தி அனுப்பினான்....

தனது திருமண நிகழ்வில் மும்ரமாக இருந்த அரசனுக்கு தளபதியின் செய்தி சென்று சேரவில்லை.... இவ்வாறாக நான்கு நாட்கள் கடந்திருக்க.... திருமண வைபவங்கள் முடிந்து தனது வழக்கமான பணிகளை தொடங்கிய அரசனின் காதுகளை வந்தடைந்தது தளபதியின் செய்தி..... உடனடியாக புதிய படையை தயார் செய்து எல்லைக்கு அனுப்பினார் அரசர்....

படைகள் களத்தை அடையும் முன்னே தாக்க தொடங்கியிருந்தான் அந்த கொடூர அரசன்...... செய்வதறியாது பாதி படைகளை இழந்து இருந்த தளபதிக்கு சரியான நேரத்தில் தனது புதிய படைகள் வந்து சேர தன்னுடைய திறமையான போர் தந்திரங்களாள் அந்த கொடூர அரசனை தனது படைகளுடன் இணைந்து வென்றான் தளபதி...... பின் தனது புதிய படைகளுடன் இணைந்து மீண்டும் எல்லையில் தனது பாதுகாப்பு பணியை செவ்வனே தொடர்ந்தான் தளபதி்.....

(உண்மை கதையை அரிய மேற்கூறிய கதையில்......

நாடாக  - எனது மடிக்கணினி
அரசனாக -  நான்
தீய சக்திகளாக  -  கணினி வைரஸ்கள்
தளபதியாக  -  Kaspresky Anti Virus         மென்பொருள்
கொடும் அரசனாக -  Torzan computer Virus

என பொருத்தி மீண்டும் படிக்க துவங்கவும்.......) 🙂🙂🙂🙂🙂

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 22, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தளபதி KASPERSKY Where stories live. Discover now