<1>

16 0 0
                                    

மகிழினி - (சுருக்கமா மகி) நம்ம ஸ்டோரியோட ஹீரோயின் குள்ளமா இருப்பா, வொய்ட் கலர், லாங் ஹேர், பிங்க் லிப்ஸ், ஷார்ட் நோஸ், கூர்மையான கண்கள் அதற்க்கும் மேல வில் போன்ற புருவம் பார்க்க ரொம்ப அழகா இருப்பா காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறா

(ஹீரோ பத்தி அப்பறம் சொல்லுறேன்)

மகி: முகத்தை உர்னு வச்சிட்டு அவளோட ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்தா

மகி அம்மா: அடியேய் ரெடி ஆகிட்டியா இல்லயா (கீழ இருந்து கத்துனாங்க)

மகி: வரேன் வரேன் இரு (அவ ஃபோன், ஜார்ஜர், கெட்செட் எல்லாம் சைடு பேக்ல எடுத்து வச்சிட்டு பேக் எடுத்துட்டு கீழ போனா)

அங்க அவ அப்பா, அம்மா வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க...

க்ரிஷ் : (அவனும் அவன் பேக் எடுத்துட்டு வந்தான்) அம்மா போய் தான் ஆகனுமா...

( க்ரிஷ் மகியோட தம்பி, +2 படிக்குறான்)

மகி அப்பா: போய் தான் ஆகனும், பேக் எல்லாம் கார்ல எடுத்து வைங்க

அப்பறம் பேக் எல்லாம் எடுத்து வச்சிட்டு நாலு பேரும் கார்ல கிளம்புனாங்க

அவங்க இப்போ எங்க போறாங்கனா ஒரு கிராமத்துக்கு அங்க மகி அம்மாவோட அப்பா, அம்மா, அவங்க அண்ணா ஃபேமிலி எல்லாம் கிராமத்துல இருக்காங்க மகி, க்ரிஷ் குட்டியா இருக்கும் போதே இரண்டு ஃபேமிலிக்கும் சண்டை வந்து மகி அப்பா, அம்மா சென்னைக்கு வந்துட்டாங்க, இப்போ ஒரு கல்யாணத்துல மீட் பண்ணப்போ இரண்டு ஃபேமிலியும் பேசி ஒன்னாகிட்டாங்க, அதனால மகி அப்பா, அம்மாவ பசங்களோட பொங்கல் கொண்டாட கிராமத்துக்கு வர சொல்லிருக்காங்க.... மகியும் க்ரிஷ்யும் சின்ன வயசுல இருந்து சிட்டிலயே வளர்ந்ததால கிராமத்துக்கு போக புடிக்கல அதான் இரண்டு பேரும் இவ்ளோ வெறுப்போட கிளம்புறாங்க..

அவங்க நைட் பத்து மணி போல கிளம்புனாங்க அந்த கிராமத்துக்கு போக காலைல ஆகிடும்...

மகி அப்பா கார் ஓட்டிட்டு இருந்தாங்க மகி அம்மா அவங்க கூட பேசிட்டே வந்தாங்க தூங்கிட கூடாதுனு பசங்க இரண்டு பேரும் பின் சீட்ல படுத்து தூங்கிட்டு இருந்தாங்க....

காத்திருந்த கண்கள் 👀💗Where stories live. Discover now