களம் காண்பேனோ காதலில் ? முன்னோட்டம்

87 11 2
                                    

குளிர்ந்த இளம் தென்றல் இதமாக வீசி கொண்டிருக்க அந்த நீண்டு வளைந்து சென்ற நெடுஞ்சாலையின் ஓரம்  இருந்த தெரு விளக்கில் இருந்து கசிந்து வந்த மங்கிய வெளிச்சமே  நடுச்சாமத்தின் கும்மிருட்டில் ஒற்றை வெளிச்சமாய் மின்னிக் கொண்டிருக்கிறது....

வாகனங்களின் பேரிரைச்சலோ ஆளரவமோ இன்றி சலனமே இல்லாது  வெறிச்சோடியிருந்த அந்த வீதியில் ஒரு மனித உருவம் மட்டும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போன்ற பாவனையில் நடந்து சென்று கொண்டிருக்க... அவனது பின்னங்கழுத்திலோ ஏதாே ஒரு உருவம் மரகத பச்சையிலான மங்கலான  மெல்லிய ஒளிக் கீற்றாக மின்னி மின்னி ஒளிர்கிறது.....

கரு மேகங்கள் கரும்புகையென அவ்விடத்தையே சூழ்ந்து கொள்ள அதுவரை இருந்த ஒற்றை புள்ளி வெளிச்சமும் மறைந்து மரகத பச்சை நிற ஒளியே அவ்விடத்தை வியாபிக்கிறது...

அத்தனை நேரம் வீசிய காற்றுக்கு என்னவானதோ திடீரென அசுர வேகத்தில் ஆளையே சுழட்டி போடும் வேகத்தில் வீசியடிக்க.... அவனோ அசராமல் நிற்கிறான்.....

பின்னங்கழுத்தில் மங்கலாக மின்னிய மரகத பச்சை நிற ஒளியோ  மண்ணினுள் வேர் அமிழ்வது போல்   அவனது தலை முதல் கால் வரை அத்தனை நாடி  நரம்புகளினுள்ளும் ஓடி  புதைந்து போய் மெது மெதுவாக மீண்டும் பின்னங்கழுத்தில் குடியேற மரகத பச்சை ஒளிக் கீற்றோ பார்ப்போரின் பார்வை மங்கி விடும் வண்ணம் கண்களை கூசச் செய்யுமளவிற்கு அதீத ஒளியுடன் அவனது உடலை விட்டு மொத்தமாக வெளியேற.... அத்தனை நேரம் கல்லாக நின்றவன் உயிரை உருவி எடுக்கும் மரண வலியுடன்  அங்கு சூழ்ந்திருந்த மயான அமைதியை கிழித்து ,

"ஆஆஆ..."
என்ற அலறலுடன் கீழே  விழ மொத்தமாக அவனது ஆன்மாவை உறிஞ்சியெடுத்து காற்றின் வேகத்தில் அந்த இடத்தை விட்டே  மறைந்து போனது, அவனது ஆன்மாவும் அவ் ஒளியும்.... அவ்விடத்தை விட்டு மட்டுமல்ல இவ் உலகையே விட்டு மறைகிறது.

_____________________________________________________________________________

"டேய்ய்... வேணா திரும்ப திரும்ப சொல்லிட்டுருக்க மாட்டேன்.... "
கழுத்து நரம்பு புடைக்க உச்சஸ்தானியில் கத்திக் கொண்டிருந்தவன் கதிர் நிலவன்..

களம் காண்பேனோ காதலில் ?Where stories live. Discover now