பூமித்தாயவளுக்கு அளித்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு கதிரவன் அவன் காலைப் பொழுதை உலகுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் கிழக்கு வானில் தோன்ற... அந்த காலைப் பொழுது இனிதே புலர்ந்தது...
செல்வந்தர்கள் குடியிருக்கும் பகுதியில் தனக்கே உரிய மிடுக்குடன் நிமிர்ந்து நின்றது அந்த பெரிய பங்களா... வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் ஏற்கனவே தகவல் சொல்லப்பட்டிருக்கும் போலும்... அவினாஷ் மற்றும் நிலவனை கண்டதும் இரும்பு கேட்டை திறந்து விட்டார்... அந்த பங்களாவின் முன் பக்க கார்டன் பகுதியை பராமரிக்கவே பல லட்சங்கள் செலவாகும் போன்று அத்தனை பிரமிப்பாய் வகை வகையான தாவரங்களை வைத்து ஒரு இயற்கை மலர் வனம் போன்றே அவ்வளவு அழகாய் அமைத்து வைத்திருந்தனர்....
இவர்கள் எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை...உள்ளே நுழைந்த இருவரையும் வணக்கம் வைத்து புன்னகையுடன் வரவேற்றவர் பாட்டியை ஊரில் சந்தித்த அதே பெரியவர் தணிக்காசலம்....
" வணக்கம் சார் நாங்க தான் உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசனும் சொன்னவங்க.... "
" முதல்ல உக்காருங்க தம்பி ரெண்டு பேரும்... பொறுமையா கூட பேசிக்கலாம் இல்லயா... " என சிரித்தவர்
" பட்டம்மா.. ரெண்டு ஆரஞ்ச் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா... " என்க
அவினாஷ்... "சார் அதெல்லாம் வேணாம் சார்... பேச வேண்டியதை பார்ப்போம் சார் " ..
" ஹா...ஹா... எங்க வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்கிங்க.. அதுவும் எங்க வீட்டு உறவு ஒன்னை சேர்க்க வந்த உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வேன்னே தெரியல.. நீங்க என்னடான்னா ஜூஸ போய் வேணாம் சொன்னா எப்படி தம்பி.. " என்று சிரிக்க...
அவரது சிரிப்பிலும் சரி முகத்திலும் சரி எந்த ஒரு போலித் தன்மையும் இல்லவே இல்லை.... ஐம்பதை கடந்திருப்பார் போலும் ஆனாலும் அவரது கம்பீரம் இன்னமும் இளமையாய் காட்டியது... இத்தனை வருட பிஸ்னஸ் உலக அனுபவத்தின் பிரதிபலிப்பு போலும் ..
YOU ARE READING
களம் காண்பேனோ காதலில் ?
Adventureஇந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல ச...