9 காதல் களம்

12 5 0
                                    

நெஞ்சில் பாரம் மட்டும் இல்லையென்றால் ராப் பொழுதென்பது இனிமையானது  தான் அனைவருக்கும்....

நாளை விடிந்ததும் அபியிடம் அவனது குடும்பத்தையும் தணிக்காசலம் சாரையும் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.... வேணிம்மாவை இருவரும் சேர்ந்து சமாளித்து கொள்ளலாம்... வேறு வழியில்லை  என்ற முடிவில் நிலவனும் அவியும் பேசியவாறு ஹாலிலே  படுக்கையை போட்டிருந்தனர்.

விடாது அடித்துக் கொண்டிருந்த அழைப்பு மணியின் சத்தத்தில் கண்விழித்த அவினாஷ்
நேரத்தைப் பார்த்து விட்டு புருவம் சுருக்கியவன் கதவருகில் எழுந்து  சென்று சாவித் துவாரத்தின் வழியே பார்க்க வெளியே யாருமில்லை... யோசனையுடன் கதவைத் திறக்க போனவன்
"யாரு அவி அது.. " என்ற நிலவனின் குரலில்

" தெரியலடா.. பார்க்குறேன்" என்று தோளை குலுக்கியவன்...  கதவைத் திறந்தது தான் தாமதம் அவன் சுதாரிக்கும் முன்னரே அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளியவாறு உள்ளே நுழைந்ததிருந்தது கர்ச்சீஃபால் முகத்தை மறைத்தவாறு ஒரு கும்பல்...

அடுத்த நொடியே நிலவன் அவியை தள்ளி விட்டவனது கையை பிடித்து முறுக்கி பின்னால் வளைத்தவாறே ஒற்றைக் கையால் அவியை தனக்கு பின்னால் இழுத்து நிறுத்தியவாறு  "யார்ரா நீங்க ?... "  என்று அடிக் குரலில் உறும... மூர்த்தி அன்ட் கோ மின்னலென அவன்  வந்த வேகத்திலும் ரௌத்திரத்துடனான அதட்டலிலும் ஒரு கணம் ஜெர்க்கானது உண்மைதான்....  அவினாஷோ வந்தவர்களை பார்வையில் அளவிட்டவாறு நின்றிருக்க...

" ஏய் இந்தாரு தம்பி மொத்தம் பதினைஞ்சி பேர் வந்திருக்கோம் ... ஒழுங்கு மரியாதையா சொல்லுறதை கேட்டு நடந்துக்கிட்டனா ரெண்டு பக்கமும் சேதாரம் இல்லாம பிரச்சனைய முடிச்சிக்கலாம் " மிரட்டல் விடுக்க...  தடி மாடும் ஒல்லிக் குச்சியுமாய் கலந்து நின்று கொண்டிருந்த பத்து பேரையும் கோணலாக இதழ் வளைத்து பார்த்து வைத்தான் நிலவன்...

அவனது பார்வையில் தெரிந்த கேலியில் கையிலிருந்த கூரிய கத்தியை முன்னும் பின்னுமாக திருப்பி காட்டிய மூர்த்தி  (மிரட்டுகிறாராம்...)

களம் காண்பேனோ காதலில் ?Donde viven las historias. Descúbrelo ahora