வணக்கம் நண்பர்களே வெகு நாட்களுக்குப் பிறகு இன்று நம் தேவதையின் பிறந்த நாளை ஒட்டி பாண்டியன் ஸ்டோர் os ஒன்று எழுதி உள்ளேன்.
கதிர் முல்லை ரசிகையாக எனது சின்ன விருப்பம். அவர்களது திருமணம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டதாக இல்லாமல். இயல்பாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாமே என்று எமது நெடுநாள் ஆசை.
ஆகையால் திருமணத்திற்கு முன்பு வந்த கதிர் முல்லை காட்சிகள் சிலவற்றை. மாத்தி யோசி கான்செப்டில் எழுதியுள்ளேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். இது என்னுடைய பார்வை மட்டுமே.
இந்தக் கதையில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் பாண்டியனும் லட்சுமியும் உயிரோடவே இருக்கின்றனர். ஜீவாவிற்கு மீனாவை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல் முல்லை குடும்பத்திற்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த சம்பந்தமும் இல்லாத கதிர் முல்லை எப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அவர்கள் இடையே திருமண பந்தம் எப்படி ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
ஒரு காலை வேலையில் கதிர் குமரேசன் மாமாவுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏலே கதிர்........ உங்க அப்பனும் பாண்டியனும் கடை விஷயமாக வெளியே போயிருக்காங்க.... இந்த ஜீவா பையன் எங்கடா போனான் கடையில் அம்புட்டு வேலை கிடக்கு பய அப்பப்ப தப்பிச்சு போயிடறானே.
கடையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தவாரே... மாமா அண்ணன் ஒரு முக்கியமான வேலையா போயிருக்கு........
ஏன்டா கடை வேலையை விட அப்படி என்னடா முக்கியமான வேலை. வர வர வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் அவன் கவனம் எல்லாம் எங்கேயோ போயிட்டு இருக்கு. ஆளே சரி இல்லடா கதிர் பாத்துக்கோ.....
correct..... மாமா அண்ணன் சரியில்ல நேத்து கூட நைட்டு கணக்கு பார்க்க சொன்னா.. ஏதோ நினைப்புல கன்னா பின்னான்னு கணக்கு போட்டுட்டு காசு குறையுதுன்னு ஒரே ரகளை பண்ணுச்சு... அப்புறம் நான் வாங்கி கணக்கு போட்டா எல்லாம் சரியா இருக்கு.