சொன்ன உனக்கு ஜீப் இப்ப வரைக்கும் பிடிக்குமான்னு எனக்கு தெரியல கங்கா ஆனா நீ சொன்னதுக்காகவே வாங்குன ராஜாக்கு இப்போ ஜீப் மட்டும் தான் பிடிக்கும். அவன் ஜீப் வாங்கி ஓட்ட ஆரம்பிச்சதும் என்ன சொன்னான் தெரியுமா என் சிவா விருப்பம் எப்பவுமே தனி தான் அவ சொன்னா மாதிரி ஜீப்ல ஓக்காந்து இயற்கையை ரசிச்சிகிட்டே
இயற்கை காத்துல முடி பறக்க ஓட்டுற சந்தோஷமே தனி தான்னு சொன்னான்.நீ உனக்கு பிடிக்கும்னு சொன்ன ஒவ்வொரு விஷயத்தோடும் ராஜா வாழுறான் கங்கா அது அவனுக்கே தெரியுமோ தெரியல.ராஜேஸ்வரி வீட்டை எதுக்கு உன் பேர்ல எழுதி வச்சான் தெரியுமா நீ உங்க அம்மா கிட்ட அந்த வீடு உனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு எனக்கும் அப்படி ஒரு வீடு வேணும்னு சண்டை போட்ட அத அவன் கேட்டுட்டான் அதான் அவன் பேருக்கு எழுதி வச்ச வீட்டை உடனே உன் பேருக்கு மாத்திட்டான்.
உனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை உனக்கு டாக்டர் ரொம்ப பிடிக்கும்னு உன் சிவன் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு ராஜாவும் டாக்டர் ஆனான்.
அவன் தான் உனக்கு தேவையான நோட்ஸ், புக்ஸ் எல்லாமே தயார் பண்ணி தருவான்.நீ படிச்சி உயர்ந்து சொந்த கால்ல நிக்கிறது உன் அம்மாக்கு எந்த அளவுக்கு முக்கியம்னு எனக்கு தெரியாது. ஆனா ராஜா கனவு, வெறின்னு சொல்லலாம்
எல்லாரும் உங்களை அடிமை, அனாதை,
அன்னக்காவடின்னு சொல்லும் போது உன்னை விட அதிகமா ராஜா துடிப்பான் அந்த பேரை நீ மாத்தனும்,உடைக்கணும் உன்னையும் உன் அம்மாவையும் அசிங்க படுத்துனவங்க முன்னாடி தலை நிமிர்ந்து நிக்கணும்னு உங்களை விட அதிகமா கனவு கண்டது ராஜா.அதை ஒவ்வொரு நாளும் நாங்க கூட இருந்து பாத்து இருக்கோம் கங்கா.
உனக்கு ஒன்னும் இல்லன்னு இருக்க கூடாது அந்த வார்த்தையையே அழிக்கணும்னு முடிவு பண்ணி வெறித்தனமா படிச்சி, பிராக்டிஸ் பண்ணி இன்னைக்கு நம்பர் ஒன் டாக்டரா வந்து நிறைய ஹாஸ்பிட்டல் கட்டி சொத்து சேர்த்து வச்சி இருக்கான்.
YOU ARE READING
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?