ரணம்47

40 1 0
                                    

ராஜா முகம் கொள்ளா சந்தோஷத்துடன்
கங்கா கை பிடித்து நடக்க துவங்கினான்.

அவன் கை பிடித்து சாலையில் நடப்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவள் நம்பவில்லை என்றாலும் அது தானே உண்மை. கங்கா முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை படித்தவன் கங்கா கையில் சின்ன அழுத்தம் கொடுத்து எனக்கும் நம்ப முடியல தான் பஞ்சுமிட்டாய் ஆனா உண்மையா நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா கை கோர்த்து நடந்து தான் போறோம் என்றான்.

வேணும்னா நீ நம்புறதுக்கு நான் ஒன்னு செய்யவா?. கங்கா கேள்வியாக ராஜாவை பார்க்க அவளின் பார்வையை புரிந்துக் கொண்டவன் பட்டென்று கங்கா கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு நிமிர்ந்தவன் இப்போ நம்புறியா உண்மைனு என்று குறும்பாக கேட்டான்.

கங்கா முகம் குங்குமமாக சிவந்து போனது வெக்கத்தில்.நல்ல வேளை அவர்கள் இருவரும் இன்னும் கிராமத்திற்குள் வர வில்லை. கங்காவின்
சிவந்த முகத்தை போதையுடன் பார்த்தவன் நம்ப வேணும்னா திரும்பவும் தோப்பு வீட்டுக்கு போய்டுவோமா?.

கங்கா வெக்கத்தில் ராஜா நெஞ்சில் சாய்ந்து தன் முகத்தை மறைத்தவள் வா குரு வீட்டுக்கு போகலாம். அங்க நமக்காக எல்லாரும் காத்திருப்பாங்க என்றாள்.

கங்காவே வீட்டுக்கு போகலாம் என்று முழு மனதாக சொன்ன பிறகு அவள் கை பிடித்து அழைத்து சென்றான். அவர்கள் இருவரையும் ஊரே வேடிக்கை பார்த்தது. அதிலும் கங்கா முகத்தில் இருந்த சந்தோஷத்தை கண்டதும் அனைவருக்கும் மகிழ்ச்சி. ராஜா மேல் அனைவருக்கும் மரியாதை வந்தது.

ராஜா கங்காவை பார்த்து கொள்ளும் விதம் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் மூலம் ஊர் முழுவதும் பரவி இருக்க இப்போது அவர்கள் நேரில் கண்டதும் அனைவருக்கும் சந்தோஷமே.

ஒரு அம்மா அவர்கள் இருவரையும் மறித்து சுற்றி போட்டவர் நீங்க இதே போல எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் இனியாவது கங்கா வாழ்க்கைல வசந்தம் மட்டும் இருக்கணும் ராஜா உன்ன நம்புறோம் கண்டிப்பா நீ கங்காவை நல்லா பாத்துப்ப துணையா இருப்பன்னு என்றவரை நோக்கி இவ என் சிவா சித்தி இவ இல்லாம ஒரு நிமிஷம் கூட என்னால வாழ முடியாது.

ரணமே காதலானதே!! அரக்கனே!!Donde viven las historias. Descúbrelo ahora